காதல்

உன் விழிகளின் பார்வையில்
நான் காண்கின்றேன் பல அபிநயங்கள் கண்ணே
அதோ நீ என்னைப் பார்க்கும்போது ஒரு
நாணம் காட்டும்போது மருண்ட மானின்
விழிகளைக் காண்கின்றன உந்தன் கண்களில்,
என் பார்வை உன் பார்வையில் விழுந்தபோது
உந்தன் விழிகளில் சின்ன சிரிப்பு காண்கின்றேன்
எனக்கு நீ என் காதலை ஏற்றுக்கொள்கிறேன்
என்று சொல்லாமல் சொல்கிறாய்அந்தப் பார்வையில்
இதோ,உன்னருகில் நான் வரவா என்று நெருங்கும்போது
உன் விழிகள், நான் வரும் முன்னே, என்னை வந்து
ஓர் அச்சம் காட்டி இப்போது வேண்டாம் என்று சொல்லி
நிறுத்துகிறது ';உஹும் முடியாது' என்று நான்மீண்டும்
முயலும்போது உந்தன் விழிகளில்
வேல் விழிகள் காண்கின்றேன் ஒரு ரௌத்திரம் ...........
இதற்குமேல்',நீ கோட்டை தாண்டாதே' என்பது போல் ......
உன்னை நான் இன்னும் முழுவதும்
தெரிந்துகொள்ளவில்லை இதற்குள் நெருக்கம்
நமக்குள் எதற்கு என்கின்றாயோ அதோ அந்த
உந்தன் பார்வையில் என்னை ஊடுருவி
பார்க்கும் அந்த பார்வையில்....................ஆனால்
பொறுத்திருந்தால் என் அன்பை முழுதாய்ப் பெறலாம்
என்று சொல்வதுபோல் காண்கின்றேன் உந்தன்
கயல் விழிகள் மூடி திறந்து மீண்டும் மீண்டும்
என்னைப் பார்க்கையில் .............கண்ணே இப்படி
உந்தன் விழிகளின் நவரசங்களுக்குள் நான்
ஒரு அபிநேத்ரியைக் காண்கின்றேன்..................
காதலன் நான் ஒரு ரசிகனுமாய் ..............


;

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jul-17, 8:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 267

மேலே