பிரிவில் வழியுது என் காதல்

சரியான ஆள் இவன்தான் என்று சட்டென எனக்கு தெரியவில்லை
நிலையில்லா பிரிவின் ஆரம்பத்திலே
நிலை கொள்ளாமல் தவிக்கிறேன் உன் நினைவினிலே
பேச பேச நினைத்து
தோற்று தோற்று போகிறேன்
EGO என்று ஏதும் இல்லை
இது வெட்கம் என்றே நினைக்கிறன் இன்றே ,,,,,,,,,,,,,,,,,,
பேசிக்கொண்டதில் பெரிதாய் தெரியவில்லை
பேசாமல் இருப்பதில் புரியுது எல்லாம்
பிரிவில் துளிர்விட்டது .......
காதலால் ஏதும் புரியாத நிலை வந்துவிட்டது
நிலவை காண்கிறேன் அதில் என் நிலாக்காரன்
கவிதை எழுதுகிறேன் அதிலும் என் தமிழ்காரன்
பழகிப்போன பேச்சும் பவ்வியமாய் மாற
சபலமாகி போகிறேன் உன் ஒரு பார்வை ஒன்றிலே
சத்தமில்லாமல் சாதிக்கிறான்
பத்திரமாய் கண்ணில் கடத்திச்செல்ல
என் சொக்கநாதன் நீ தான் என்று சொல்லிவிடுகிறேன்
முதல் ஆளாய் வந்து பேசிவிட்டேன் .......................................