முழுமை பெற்றதடி இந்த இயற்கைக் காட்சி

ஆயிரம் மலர்கள் பூத்துக் குலுங்கும்
வண்ணமலர்த் தோட்டம்
ஆதவன் எழுந்து வரும் கிழக்கு வானம்
அதிகாலை அருங்காட்சியகம்
தேன் சிந்தும் மலர் மான் துள்ளும் மலர் வீதி
ஏன் ஏதோ குறை தோன்றுகிறதே என்று எண்ணுகையில்
இன்னிதழ்களும் விழிகளும் புத்தகமாய் விரிய
சிலையென சித்திரமென நீ நடந்து வர
முழுமை பெற்றதடி இந்த இயற்கைக் காட்சி !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jul-17, 9:13 am)
பார்வை : 176

மேலே