மழை வேண்டும் உன்னாலே குளிர் வேண்டும்
புன்னகையால் வதைக்கின்றாய் பூவிழியால் சிதைக்கின்றாய்
சலங்கை ஒலிச் சிரிப்பாலே சதாமனதை நெரிக்கின்றாய்
கனவிலும் வருகிறாய் கண்தூக்கம் கெடுக்கின்றாய்
என்வரிகளில் வாழ்பவளே வலிகளை நிதமும் தருபவளே
கண்களால் கதை சொல்லும் காரியம் செய்பவளே
நெஞ்சுக்குச் சிதை மூட்டி என் நினைவைச் சுடுபவளே
சுட்டது போதும் உன்னால் நான் பட்டதும் போதும்
பட்ட மரமும் நீர் கண்டால் தளிரும் நீ சுட்ட மனம் யாராலே குளிரும்
அதனால் மழை நீராய் வருவாயா
என் மன வீட்டில் தளிர்வாயா என்னுடலம் குளிர்வாயா
ஆக்கம்
அஷ்ரப் அலி