சூரிய உதயம்-சிறுகதை

அதிகாலை நேரம்
அழகான மனைவி
ஓயாத கடலலை... பார்த்தபடியே சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன் கடற்கரையில்....


திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் கடந்த பின்னும் மனைவிடம் முகம் கொடுத்து பேசியதில்லை...காரணம்....... காவ்யா என் முதல்காதல் என்னை விட்டு விலகவில்லை...
அவளும் என்னை விட்டு போகவில்லை....
எதிரே ஒருவன் எங்களை கடக்கையில் சிரித்துக்கொண்டே சென்றான்.

என் பிழைப்பு இ்ப்போது,அப்படித்தான் உள்ளது என நினைத்துக் கொண்டேன்.

மனைவியிடம் இன்று என் முதல் காதலை பற்றி சொல்லி விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்...

என் காதலியையும் வர வைத்து பேசலாம் என ஃபோன் பேசிவிட்டு வருவதாக கூறினேன் அவளும் தலையசைத்தாள்.

கடல் சத்தம் அதிகமாக இருக்கிறதென்று சற்று தூரம் ஃபோன் ரிங்க் ஆகும் வரை நடந்தேன். ஒரு சிலர் மதிலின்பின் நின்று பேசி கொண்டிருந்தனர்.
காவ்யாவிடம் வர சொல்லி ஃபோனை வைக்கும் நேரத்தில் அவர்கள் பேசுவது என் செவிகளை எட்டியது...

அவர்கள் யாரையோ கொல்லும் நோக்கத்தில் வந்திருக்கிறார்கள் நான் அவனை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தேன்.கொலைகார கும்பலை அடையாளம் காண அந்த மதிலை எட்டி பார்த்தேன்.... சற்று முன் கடற்கரையில் சிரித்துக்கொண்டே எங்களை கடந்து சென்ற அந்த ஒருவன்.

அந்த நொடியில் இருந்து என் மனதிற்குள் பலபல கேள்விகளும் அர்த்தமில்லா பயங்களும் தொற்றிக்கொண்டன.

முதல் கேள்வி அதிகாலை நேரத்தில் கடற்கரைக்கு மனைவி அழைத்தது ஏன் என்பதுதான்.குழப்பத்துடனே என் மனைவியை நோக்கிச் சென்றேன்.
என்ன கேட்பதென்று தெரியவில்லை . ஆனால் இவள் தான் ஏதோ சதி செய்கிறாள் என புரிந்தது .
யாரையோ காப்பாற்ற நினைத்தேன்.ஆனால் அது நான் என்னும் போது எப்படி காப்பாற்றிக்கொள்ள போகிறேன் என்று தான் தோன்றுகிறது.

அவர்கள் மொத்தம் ஆறு பேர் எங்களை நோக்கி வருவதை கவனித்தேன் சுற்றி முற்றி பார்தேன் ஒருவரும் இல்லை ... பதட்டமும் பயமும் அதிகமானது ...
நீ யாரையாவது காதலிக்கிறாயா என கேட்டுவிட்டேன் அவள் மெதுவாக தலையை திருப்பி என்னைப் பார்த்து ம்ம் என கூறி தலையசைத்தாள்.
கொலைகார கும்பலும் வந்து கொண்டே இருக்க,பதட்டத்தில் திரும்பி சுற்றும் முற்றும் பார்தேன். காவ்யா நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.
காவ்யாவை பற்றி சொல்லும் முன் இவளது காதலை பற்றி கேட்டு விடுவோம் என்று யாரை என்று கேட்டேன்... அவள் சிறு புன்னகையோடு
'உங்களைத்தான் ' என அழுத்தமாக சொன்னாள்.

இதை கேட்ட அந்த நொடி .....


உறைந்துவிட்டேன்...
கொலைகார கும்பலும் நெருங்கிவிட்டது. கண்களை மூடிக்கொண்டு என் மனைவியை இறுக்கி கட்டிக்கொண்டேன்.

"கார்த்திக்" என்ற ஒரு குரல் கேட்டது. கார்த்திக் என்பது என் பெயர் அல்ல ..
கண்களை திறந்தேன்.
என்னை அடிக்க வந்த அவன் கட்டையை ஓங்கியபடி அசையாமல் நின்றான். அவன்தான் கார்த்திக் என புரிந்துக்கொண்டேன்.
காவ்யாவின் குரல் அது
காவ்யா எங்கள் அருகில் வந்து நின்றாள்.

கார்த்திக்,காவ்யாவை ஒருதலையாக காதலித்தவன் என்பதும், என்னால் தான் அவள் அந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் தெரிந்தது.

அப்புறம் என்ன, காவ்யா கார்த்திக் உடனும் நான் என் மனைவியுடனும் நடக்க தொடங்க
சூரியன் உதயம் ஆனது...எங்களின் காதலும் தான்...

நன்றி...

எழுதியவர் : சூர்யா (4-Jul-17, 8:07 pm)
சேர்த்தது : சூர்யா
Tanglish : sooriya udhayam
பார்வை : 1027

மேலே