மௌனம் பேசும் காதல்
அவளை மௌனமாகப் படைத்து
என்னை மௌனமாக மாற்றிவிட்டது
அவள் மௌன மொழிகள் அவள்
கண்கள் பேசும் மொழிகள்!
அவள் நாவின் நுனியிழந்து
உதடுகள் பேசாத மொழிகள்
கண்கள் மட்டுமே அறியும்~என்
இதயமும் அறியும்!
என் கைகள் தொட்டு ஆறுதல் சொல்ல
அவள் கண்களில் கண்ணீரும் மெல்ல
என் தோள் சாய்ந்து அழும் அவள்
என் குழந்தை!
பேச்சை இழந்து மூச்சில் உறவானோம் அவள்
மௌன மொழி எங்கள் காதல் மொழி!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்