நிறைமதி நாள்

தனக்கான காதலியை கணடுக்கொண்ட இரவரசன்,
ஒரு கோடி விண்மீனும் ம(ய)ங்கியதோ உன்னொளியில்.?
உனைக்காணும் ஆவலிலே அல்லியோகண்மலர பொருக்காத- கார்மேகன்
உனைசூழ,
உன் ஒளிக்கற்றை மிளிரும் உன்பேரழகிற்க்கு நிகரில்லை. மனகவலை மாற்றவல்ல மாமதியே!
நீ கொண்ட மமதையினால் காதலியை காணாத காதலன் போல் மாதத்தில் சிலநாட்கள் உருத்தேய்ந்து போகினறாய்! காணமல் போனாய் யெண்று விண்மீன்கள் ஆர்ப்ரிக்க சொல்லெண்ணா இருள் மனது வேலைக்கு சென்ற காதலியை
சீட்டியிட்டு அழைக்கும் காதலன் போல் ஈசனவன் கருனையினால் மீண்டெழுந்து வந்துவிட்டாய் !
நின் பொன்னடல் தேறி,உன் மனகோவம் மாறி, நான்அறிந்தும் அறியாமல் செய்த பிழை யாவும் பொறுத்து, என்கைத்தொட்டு வாரியணைக்க என் மன்னவன் வரும் நிறைமதி நாள் இந்நன் நாளோ?

எழுதியவர் : (8-Jul-17, 7:41 pm)
பார்வை : 177

மேலே