காதல்
தேனே, தெள்ளமுதே,
கரும்பு ரசம் தந்த
கற்கண்டு பாகே-என்று
இப்படி என்னை எழுத
தூண்டுவது உன்
மாசிலா வதனத்தில்
ததும்பி நிற்கும் அழகு
அதன் தூறலில் நனைந்து
நான் வசந்தத்தில் வரும்
மழையில் நனைந்த இன்ப
கிளர்ச்சியில் என்னை மறந்தேன்
என்னுள் நீயே நிறைந்தாய் என்னவளே
நானும் அல்லவா உன்னுள் மறைந்தேன்
இப்போது எங்கும் நீ தான் என்னவளே
என் காதல் பதுமையே