மரணத்தின் விழா

இழவு வீட்டில் அழுது கொண்டிருக்கிறார்கள் ...
கீழத்தெரு முனியப்பன் மரணம்...
உறவினர்கள் கும்பலாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

நேத்து மத்தியம் கூட பார்த்தேன்
நல்ல பேசிட்டு இருந்தாரு
சாயந்தரம் போல வானம் இருட்டிட்டு வந்து மின்னல்
அடிக்க ஆரம்பிச்சிருக்கு
இவரு வீட்டுக்கு போய்,, மின்னல் அடிக்குதே கேபிள் வயர் எடுத்துடுவோம்,
சரினு கேபிள் வயர்ல கைய வைச்சருக்காரு..
அப்போ பார்த்து மின்னல் அடிக்க கேபிள் வயர் மூலமா மின்னல்
வந்து ஷாக் அடிச்சு தூக்கி எறிஞ்சுருச்சு..
ரொம்ப வோல்ட்டேஜ் கரண்ட் வந்ததால ஸ்போட்லியே
இறந்துட்ட்ருயா ....
இதுக்கு இருத்தக்கா 32 வயசு தான்...
இப்படி பொசுக்குன்னு போய் சேருவாருனு யாரு கண்டா...

உள்ளே பெண்களின் அவ்வப்போதான விட்டு விட்டு அழுகைகள்..

பிண வீட்டிற்க்கே உண்டான வாசம் எங்கும்..

நாடியை துணியால் சேர்த்துக் கட்டி தலையில்
முடிந்திருந்தார்கள் !!

வாயிலே திணிக்கப்பட்ட அரிசி உதட்டருகில் எட்டிப்பார்க்கிறது,,
ஒருவர் தட்டி விட்டு செல்கிறார்....

குளித்து மாலை அலங்காரத்தோடு (கடைசியா இவர் மாலை அணிந்தது இவர் திருமணத்தின்
போது) உடல் விறைத்துக்கொள்ளாமல் இருக்க ,,
நாற்காலியோ சேர்த்து கட்டப்பட்டு கிடக்கிறான் முனியாப்பன்...

உறவினர்கள் வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள்..

தன்னை பெரிய மனிதர் என்று அறிவித்துக்கொள்கிற சாக்கில்
எல்லா காரியங்ககளையும் செய்துக்கொண்டிருக்கிறார்..
அவ்வப்போது ஆணையிட்டுக்கொண்டிருக்கிறார் ஒருவர் ...

வெட்டியான் வருகிறான்..

"அப்போ மேல காரியத்தை செஞ்சுடலாமா?" -என்றான்

"பண்ணிருப்பா நேரம் ஆகுது பாரு"

சங்கை பூம் என்று ஊதிக்கொண்டே சிகண்டியை அடிக்கிறான்..

இவரோட மனைவி யாரு ? இப்படி வாங்கம்மா..


முனியப்பன் மனைவி பொன்னாத்தா கேவலுடன் ]
வருகிறாள்..

வாங்க குடம் எடுத்துக்கோங்க விபுதி பத்திலாம்
வாங்கிருக்கிங்களா?

வாங்கியாச்சு வாங்கியாச்சு

வாங்கம்மா இந்த அம்மாவோட சொந்தம் எல்லாம்
வாங்க..
கூட்டிக்கொண்டு போய் பிணம் கழுவ தண்னிர்
எடுத்து வருகிறார்கள்..
அடுத்து பிள்ளைகள்..

பின்னர் குளித்து புது உடை உடுத்தி ரெடியாகிறன் முனியப்பன்..

வண்டி வந்துருக்கோய்...

பூக்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தது
இறுதி ஊர்வல வண்டி...

பிடி.. பிடி,, அந்த பக்கம் பிடிச்சுக்க, இங்கிட்டு
சுத்தி வா...

தலை தெரியுற மாதிரி தான் வைக்கணும்..

ஆங்.. வண்டி கிளம்பட்டும்...

மெதுவாக நகர்ந்தது வண்டி...

வீதி வரை வரும் பொன்னாத்தா..
பானையில் துளையிட அழுதுகொண்டே
வண்டியை சுற்றும் பொன்னாத்தா...
பானை தரையில் உடைகிறது...

இறுதி ஊர்வலம் மெதுவாக கிளம்புகிறது...

வண்டிக்குள் ஏறிநிற்கும் சிலர் வழியில் பூக்களை உதிர்க்கிறார்கள் ..

வழியெங்கும் சிதறுகிறது பூ..

கொஞ்சம் மெதுவா போப்பா..
பின்னாடி ஆளுங்க வர்ராங்க..
வேகமெடுக்கும் வண்டிக்காரனை அதட்டுகிறார் ஒருவர்..

இறுதி ஊர்வலம் ஒப்பாரி பாடலுடன் போய்க்கொண்டிருக்கிறது..

வண்டியை வழியில் காணும் பலர் முகத்தை சுளித்துக்கொள்கிறார்கள்...
அவசரமாய் விலகிப்போகிறார்கள்..
முகத்தை திருப்பிக்கொள்கிறார்கள்..

வண்டி வந்து நிற்கிறது...

மயானம்..

அப்படி வையு....

இறந்தவரோட அப்பாவும் மகன்களும் அந்தப்பக்கம்
போய் சவரம் பண்ணிட்டு வாங்க...

சட்டையை கழட்டி தலையை நினைத்துக்கொண்டு உக்காருகிறார்கள்...
சவரக்கத்தி சிரைக்க, தலை மொட்டையாக்குகிறது,,

வாங்க இப்படி வாங்க வரிசையை நில்லுங்க...
வாய்க்கரிசி போட்டுங்க வெட்டியான் சொல்கிறான்...

எல்லோரும் வாய்க்கரிசியோடு சில்லரையும்
போடுகிறார்கள்..
முனியப்பா... என்று கேவலுடன் வாய்க்கரிசி போடுகிறார்
முனியப்பனின் அப்பா...

எல்லோரும் போட்டு முடித்ததும் சில்லறையை மட்டும் பொறுக்கிக்கொள்கிறான்
வெட்டியான்...

சவம் தூக்கப்படுகிறது....
தகன மேடைக்கு கொண்டு செல்லபடுகிறது.
தகன மேடையும் வைத்து எரிக்கப்பட உள்நுழைக்கப்படுகிறது...

கூட்டம் கலைகிறது....
எல்லோரும் குளிக்க கிளம்புகிறார்கள்...

"ஜென்மம் நிறைந்தது
சென்றவர் -வாழ்க
சிந்தை கலங்கிட
வந்தவர் -வாழ்க
நீரினில் நிறைந்திட்ட
கண்களும் -காய்க
நிம்மதி நிம்மதி
இவ்விடம்-சூழ்க
-வைரமுத்து




எழுதியவர்
- அருள்.ஜெ

எழுதியவர் : அருள்.ஜெ (9-Jul-17, 11:17 am)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : maranthin vizhaa
பார்வை : 389

மேலே