ஒரு வேலையில்லா பட்டதாரி பாகம் 2

resume மட்டும் இப்போ கொடுத்துட்டு போங்க
ஏதாவது வேலை இருந்தா சொல்லி அனுப்புறோம் என்றவரிடம்
சோகையாய் நன்றி சொல்லி விட்டு வெளியே
வந்து விட்டேன்...
அப்பொழுதே புரிந்து விட்டது இந்த வேலையும்
கிடைக்க போவதில்லை...

சே...
வலது கையில்ருந்து இடது கைக்கு பைலை
மாற்றி கொண்டு வெறுப்புடன் நடந்தேன்...

RESUME மட்டும் இப்போ கொடுத்துட்டு போங்க....
எத்தனை அலுவலங்களில் இந்த வார்த்தையை கேட்டகி விட்டது...
வேலைதான் கிடைத்தபாடில்லை......
எல்லா ஆஃபீஸ்லயும் இப்படி தான் சொல்லணும்னு
பேசிவச்சுக்குறாங்களோ..?

பேருந்து பிடித்து எனது நிறுத்தத்தில் இறங்கிக்கொள்கிறேன்...

எந்த முகத்தையும் சந்திக்கவே பிடிக்கவில்லை...
தலைகுனிந்தே இப்போதெல்லாம் நடக்கிறேன்..

கல்லூரி முடித்து வெளி வருகையுள் தான் எதனைக் கனவுகள்..
நல்ல வேலையில் அமர்ந்து கைநிறைய சம்பாதித்து..
வீடு வாகனம் வாங்கி கேலி செய்தவர்கள் மூஞ்சில்
கரி பூசி...

டேய் அருளு இங்க வா...

சிந்தனை கலைந்து கூப்பிட்ட நடேசன் மாமாவிடம்
நடந்தேன்...

என்னடா எதோ இன்டெர்வியூ போறேன்னு சொன்ன என்னாச்சி..?

கால் பண்ணுறேன்னு சொல்லிருக்காங்க மாமா..

இங்கையும் அப்படி தான் சொல்லிட்டாங்களா..? சரிதான்
அப்போ இங்கையும் ஊத்திகிடுச்சுனு சொல்லு சிரித்தார்..
பேசாம நீ என் பையன் கூட வேலைக்கு போய்ட்டேன்...

சே சே அப்படிலாம் வந்துர முடியாது மாமா நான் காலேஜ்
வர படிச்சுருக்கேன்ல..
நான் என்னோட படிப்புக்கு ஏத்தமாதிரி தான் வேல
தேடிக்கணும்...

பெரிய மசுரு படிப்பு படிச்சு கிழிச்சுட்டே...
என் பையன் என்ன படிச்சான் பத்து கூட தாண்டல
ஆனா இப்போ மாசம் 9000 வாங்குறான்...
சொந்தமா பைக் வாங்கிட்டான்...
நீயும் அவனும் ஒண்ணா தானால படிச்சீங்க...

என்னோட பையன் பெரிய படிப்பு படிக்கான்னு
உங்கப்பன் எக்கச்சக்கமா கடன் வாங்கி உன்ன படிக்க வச்சான்..
நீயும் படிச்ச.... ஆனா வேலை கிடைச்சதா..?
இன்னும் வேலை கிடக்கலைனு அலைஞ்சுட்டு இருக்க...?
பேசாம நான் சொல்லற மாதிரி பண்ணி உருப்படுற வழிய பாத்துக்க
அவ்வ்ளோதான் நான் சொல்வேன்...

வீடு வந்தேன்...

என்னடா ஆச்சு என்றார் அம்மா
பதில் சொல்லாமல் நுழைந்தேன்..

ஏன் வேலை கிடைக்கல...?
அட நான் மட்டுமே இப்படி என்றால் அதும்
இல்லை என்னை போல எத்தனை வேலை இல்ல பட்டதாரிகள்...

என் தம்பியுடன் படித்தவன் சென்னையில் டீகடையில் வேலை செய்கிறான்
மாசம் 8000 சம்பாதிக்கிறான்...
ஆனால் கல்லூரியில் படித்த ஒருவன் எந்த வேலையும் கிடைக்காமல்
மனம் நொந்து ௫௦௦௦ 6000 சம்பளத்தில் வேலைக்கு போகிறான்...!!!
அந்த பணம் கூட முதலாளிகள் மனம் வைத்து கொடுத்தால் தான் உண்டு....
ஒரு சாதாரண வேலையாளுக்கு விலைவாசி ஏறும்போதெல்லாம்
சம்பளமும் ஏறுகிறது...
பட்டதாரிகளுக்கு ஏறுவதில்லை...
அரசாங்கம் எதன் அடிப்படையில் இவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்கிறது..?

கம்ப்யூட்டர் டைப்பிங் தெரிந்தால் போதும் என்றால் எதற்கு பதினைந்து
வருட கல்வி..?

ஒரு அடித்தட்டு பட்டதாரி சுமந்து வரும் கடமைகள் தான்
எவ்வளவு..?
அப்பாவின் கடன்...
அம்மாவின் மருத்துவ செலவு..
தம்பி தங்கை படிப்பு...
அக்கா தங்கை திருமணம்...
இத்தியாதி... இத்தியாதி....


நினைவுகளோடு தூங்கிப்போனேன்....

டேய் எந்தி....
என்னம்மா...?

வீட்டுல சும்மா தான இருக்க
கடை வர போயிட்டு வா.....

"சும்மாதானே இருக்க"
என்னை போன்றவர்களை அதிகம் காயப்படுத்தும் வார்த்தையில் இதுவும்
ஒன்று....

விவசாய அப்பா மழை பொய்த்து போய் கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்...
ஏதாவது நல்ல வேலை மட்டும் கிடைச்சா...!!

அம்மாவின் தேவையை நிறைவேற்றி விட்டு
நூலாக்கம் சென்று புத்தாக்கத்தில் வேலை வாய்ப்பு செய்தியில் ஆழ்ந்து போனேன்...

இரவானது.....

வீடு வந்தேன்...

என்ன வேல கிடைச்சதா என்ற அப்பாவின் கேள்விக்கு பதில்
சொல்லாமல் அமைதியானேன்....

மறுநாள்....

அப்பா ..

என்ன என்பது போல பார்க்கிறார்...

இன்னைக்கு ஒரு இன்டெர்வியூ செலவுக்கு பணம் இல்ல..
ஆழ்ந்து நோக்கும் அப்பா...

தலை குனியும் நான்...

பையில் இருந்து நூறு ரூபாய் எடுத்து நீட்டுகிறார்..

இன்டெர்வியூவில்...

RESUME இப்போ கொடுத்துட்டு போங்க
வேல இருந்தா கால் பண்றோம்...
கசப்பாய் புன்னகைத்து...

இந்த வேலையும் கிடைக்க போவதில்லை......


எழுதியவர்

-அருள்.ஜெ

எழுதியவர் : அருள் ஜெ (9-Jul-17, 7:38 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 377

மேலே