என்னுள் நீ
உறக்கதில் கண்ணயரும் போது
இரவுகளின் ஆலோலம்
மனதை எழுப்புதடி...
கண்ணே...
உன்முகம் காணாமல்...
மனமெல்லாம் எரிகணலாய் இருக்குதடி...
பசித்திருந்தும்
உணவிருந்தும்
மனமட்டுமேனோ
பற்றற்று கிடக்குதடி...
எங்கோ நீயிருக்கிறாய்
என் நினைவுகள்
ஏதுமின்றி....
நான் மட்டுமிருக்கிறேன்
நீயன்று ஏதுமின்றி...
இரவுகள் உறக்கத்தை
பரித்தன...
உன் நினைவுகள்
இன்னும் ஆரோக்கியமாய் என்னுள்...