பரித்தாயே
மாலைகள்
மனதை வாட்டுதடி
உன் சேலை
முந்தானை வாசம்
வேதனைக்கூட்டுதடி..
ஒரு வேளையுனை
காணாவிடில்
கண்ணுறக்கம் போகுதடி....
என் மணமறியா மங்கையே...
உன் முகம் பார்த்து
நகைத்ததில்லை...
குரல் கேட்டுரைத்ததில்லை..
உனைக் காணும்
வாய்ப்பைக் கூட
என்னின்று பரித்தாயே..
தினமுனைக் காணவே
உன் வாயில் வருகிறேன்..
எனைக்கண்டு நகைக்கக்கூட வேண்டாம்...
என் பார்வைக்கு
வந்தால் போதும்...
இரவுகள் இனிதாகுமே...