எனது ஆசைகள்

ஆடாமல் அசையாமல்
உன்னையே பார்த்து கொண்டிருக்கும்
கண்காணிப்பு கேமராவாக
ஆசை...

தொட்டுத் தொட்டு உன் வாசனையை
நுகர்ந்து கொண்டே இருக்கும்
உன் சட்டையாக மாற
ஆசை...

உன் கைகளுக்கு இடையே
அடிக்கடி நெறிப்படும்
உன் செல்பேசியாக
ஆசை...

உன் பாதத்தில் மிதிபடும்
செருப்பாக மாற
ஆசை...

உன் தலை மற்றும் மீசையிலிருந்து விழும்
முடிகளை சேகரிக்கும்
பொறுக்கியாக மாற
ஆசை...

கண்களை மூடி
உன் கை பிடித்து
வெகுதூரம் நடக்க
ஆசை...

நீ வேண்டாம் என்று வெளிவிடும் மூச்சை
ஆயுள்வரை நான் மட்டுமே சுவாசிக்க
ஆசை...

சாகும் வரை உன் காதலில்
நான் மட்டுமே இருக்க
ஆசை...

உன்னைவிட்டு நான் இறந்தால் நீ தவித்து போவாய்
என்னைவிட்டு நீ இறந்தால் நான் துடித்துப் போவேன்
அதனால் இருவரும் ஒன்றாக சாக
ஆசை...

உன் கை கோர்த்து
உன் உதட்டின் மேல் என் உதட்டை
வைத்தவாறே உயிர் பிரிய வேண்டும் என
ஆசை...

இறந்த பின்னும் காற்றாக
நாம் இருவரும்
இந்த உலகை சுற்றிவர
ஆசை...

எழுதியவர் : ம.ஜான்சி (14-Jul-17, 3:31 pm)
Tanglish : enathu aasaikal
பார்வை : 346

மேலே