உந்துசக்தி
என் காதலை வெற்றிபெறச் செய்ய
நான் எவ்வளவு துன்பப்பட்டேன்
ஆன அந்த காதல் எனக்கு எதுவும்
தரலை என்பது சமீபத்து வேதாந்தம்
நான் கஷ்டப்பட்டு படித்தேன்
நான் கஷ்டப்பட்டு வேலைக்குப்போனேன்
நான் கஷ்டப்பட்டு கல்யாணம் செய்தேன்
அப்ப காதல் இல்லைனா
படிக்க மாட்டீங்களா???
வேலைக்கு போக மாட்டீங்களா???
கல்யாணம் செய்ய மாட்டீங்களா???
என்னப்பா நியாயம் ???
உங்களுக்கு தேவை நீங்க செய்யறீங்க
அதை செய்வதற்கு ஒரு உந்துசக்தி
தேவைப்படுகிறது அது "காதலாக" இருக்கலாமே???