இல்லாமையின் பெருங்காதல்

இரவுகள்
வருவதும் போவதுமாய் இருக்கிறது
இதே நாற்காலியில்தான்
தினமும் இப்படி வெறித்து பார்க்கிறேன்
தனிமை எனக்கிட்டிருக்கும்
இந்த நாற்காலியை
உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்
இல்லாமையின் பெருங்காதலோடு
எளிய சிரிப்பையாவது சிந்திவிடுங்கள்
வெடித்துடைந்து நிறம் மாறட்டும்
இவ்விரவு