உணர்வில் கலந்த உறவு

இதயத் தென்றல் நீயடீ
இனிமைச் சுவையும் நீயடீ
உறக்கம் இல்லா இரவடி
உணர்வில் கலந்தாய் நீயடி
வானில் தேயும் நிலவடி
வளர்வ துந்தன் நினைவடி
உலவும் சொந்தம் நீயடி
உலகே எனக்கு நீயடீ
மண்ணில் எனக்கு யாரடி
மரணம் வரைக்கும் நீயடி
ஆக்கம்
அஷ்ரப் அலி