கவி வாழ்க கவிஞன் வாழ்க காதலும் வாழ்க

உன்னை நிலவோடு ஒப்பிட்டு எழுதினால்
ஆணா ? பெண்ணா ? என பட்டி மன்றம்
நடத்துவார்கள் !
பார்வையின் பொருள் யாவும் நீ என்று
சொன்னால் கண்மருத்துவரை பார்க்கவேண்டும்
என சொல்வார்கள் !
கடலோடு உன்னை ஒப்பிட்டு எழுதினால்
கடல் தாய் தானே ,கன்னி எப்படி ஆகும் என
சொல்வார்கள் !
இதழ் வரிகளை அழகு என எடுத்துரைத்தால்
விஞ்ஞானத்தின் சான்று கேட்பார் !
ஊனமுற்ற பிள்ளை ஆயினும் தாய்க்கு
உருப்படியான பிள்ளைதான் !
கவிப்புலமை இருந்தால் தான் கவிஞரா !
காண்பவைகளை ரசிப்பவனும் கவிஞனே !
காதலை ருசிப்பவனும் கவிஞனே !
காதலியை உலகத்தின் ஒப்பற்ற பேரழகியாய்
தரிசிப்பவனும் கவிஞனே !
அவர் அவர்க்கு அவர் பிள்ளை அழகு
யாவருக்கும் அவர் அவர் கவி மட்டுமே பேரழகு !
கவிதை ஓர் குழந்தை ! குழந்தையின் மார்பிளந்து
இதயம் குட்டியாக இருக்கிறதே என்ன செய்யலாம் ?
என யோசிப்பதில் ! கூட ஆனந்தம் கூடும் போல !
கருத்துரைத்தல் ,விமர்சித்தல், கவிக்கு ஓர் அழகு
ஆராய்தல் ,அலசல் ,வதைத்தல், கவிக்கு அழகோ ?
கவிஞனுக்கு அழகோ ?
தமிழ் வாழ்க !
தமிழ்த்தாய் வாழ்க !
கவிதை ரசனை உள்ளங்கள் வாழ்க !
கவி வாழ்க !
கவிஞன் வாழ்க !
காதலும் வாழ்க !