சாளரம்

சாளரம் !

வாசலற்ற
என் வீட்டில்
சாளரமாய்
நீ வந்து,
சுவாசமற்ற
என் நாசியில்
தென்றலினை
திணித்தாய்!!

ஏக்கம் சிந்தியே
இருள் சூழ்ந்த
என் விழிகளில்
வெளிச்சத்தை
ஊற்றினாய்!

வெற்றுக்காகிதமான
என் வாழ்வில்
விடையாய்
உன் உறவினை
எழுதினாய்!!

உனக்கான
தேடலில்
உடைந்து போன
என் உயிரினை
ஒன்று சேர்த்து
உருவம் தந்தாய்
'காதலாய்' !

தனிமை நோயில்
தளர்ந்து போன
என் இதயம்
இன்று,....
உன் துணையெனும்
மருந்தில் துளிர்க்கிறது!!...

-தேன்கவி

எழுதியவர் : தேன்கவி (15-Jul-17, 4:59 pm)
சேர்த்தது : Thenkavi Ayyarappan5969fb65c3928
பார்வை : 313

மேலே