பதம் பார்த்து பழகிவிடு நண்பா..

நான் நட்ட விதைக்கெல்லாம்
நீர் ஊற்றி வளர்த்து விட்டு
அழகு பார்த்தான் என் உண்மை நண்பன்..

அது வளர்த்து செடியாகி
காய் காய்த்து நிற்கையிலே
பழம் பறிக்க ஓடி வந்தான் மற்றொரு நண்பன்..

தான் தவித்து
என் தாகம் தீர்த்து வைத்தான்
என் உண்மை நண்பன்..

தான் குடித்து
தன் தாகம் தீர்ந்த பின்னே
எனக்களித்தான் மற்றொரு நண்பன்..

வெண்ணிலவை நான் கேட்டால்
தன் தோளிலே சுமந்து வருவான்
என் உண்மை நண்பன்..

நான் கேட்டு
சிறு துரும்பைக்கூட
நகர்த்த மாட்டான் மற்றொரு நண்பன்..

பதம் பார்த்து பழகிவிடு
உன் உண்மை நட்பை
தேர்தெடுக்க..

இல்லாவிட்டால்
அது உன் கழுத்துக்கே கத்தி வைக்கும்
என்பதை நீ புரிந்து கொள்ள..

எழுதியவர் : தோழி... (20-Jul-11, 1:05 pm)
சேர்த்தது : faheema
பார்வை : 534

மேலே