கல்வியின் அவலம்

!!! கல்வியின் அவலம்!!!

கரு கதவை முட்ட,
கல்விக்கூடம் தேட முனைந்தாரே..
மழலை மடியில் தவழ,
பள்ளி சென்று சேர்த்தாரே !!

உன் முத்தம்கூட மறந்து போச்சு,
கன்னம்மெல்லாம் மறத்து போச்சு!!!
காசக்கொடுத்து பொழுதுபோக்க சொன்னே,
போக,போக உன் முகத்தக்கூட மறந்துட்டேனே!!!

பாசம் காட்ட யாரும்மில்லை,
புரிந்து கொள்ள பருவம்மில்லை!!!
செல்லும் வார்த்தை புரியவில்லை,
திருப்பிக் கேட்க்க நாவு இல்லை!!!

நாக்கு கூட செத்துப்போச்சு,
பரிவு அற்ற சோறுஉண்டு!!!
சுமையை தூக்க சத்து இல்ல,
ஏடு தூக்கி இடுப்பு போச்சு!!!

பொழுது விடிஞ்சா பயிற்சியாச்சு,
பயிற்ச்சிப்பூரம் காசு ஆச்சு!!
மனனம் செஞ்சு மறத்துப்போச்சு,
சுயம் மறந்து ஏடு மட்டும் வாழ்கையாச்சு!!!

மதிப்பெண்னவச்சு மதிக்கறயே,
என் கருத்தகேட்க மறுக்கறயே!
பிறமொழிய தூக்கி பிடிக்கிறயே,
தாய்மொழியப் போட்டு மிதிக்கறயே!!!

காசுக்கொரு கல்வியென,
ஏலம் போட்டு விற்கிறயே,
காசுக்காக நீ தந்த அழுத்ததாலே,
மாணங்கெட்டு நிற்கிறோமே!!!

விடிவு எப்போ, விடிவு எப்போ,
என் கனவுக்கான கல்வியெப்போ???

உங்கள்
தௌபிஃக்

எழுதியவர் : தௌபீஃக் (18-Jul-17, 7:54 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 151

மேலே