நிரந்தரமில்லா உலகில்

பட்டங்களும், பதவிகளும் கானல்நீர் போலே...
சட்டங்களும் நீதியும் எட்டாக்கனி போலே...
உறவுகளும், சமுதாயமும் மாயவனம் போலே...
நெறிக்கெட்டு, தறிக்கெட்டு வேகுதடா சாமி...

பன்னிரண்டு வருடம் படித்த அடிப்படைக் கல்வி தகுதியாக அமைவதில்லை...
நான்கு வருடம் அரும்பாடு பட்டு கடனை வாங்கி, கல்விக்கட்டணம் செலுத்தி படித்து முடித்துவிட்டு வேலைக்குப் போனால், நம்மல
கீழ, மேல பார்த்துட்டு ஆயிரம் குறைகள்,
ஆயிரம் கேள்விகள்,
அவற்றை ஆராய்ந்தால் உனக்கு ஏமாற்றத் தெரியுமா? என்பதைத் தான் இலைமறைக்காயாகக் கேட்கிறார்கள்...

முமுமையடையா உலகிலே பணமே எல்லோருக்கும் குறிக்கோள்...
அந்த பணத்திற்காக ஒரு கொள்கை...
அதற்கு ஒரு தலைவன்...

வெகுதூரமில்லை இந்த பாழும் உலகின் அழிவு...

தரமான பொருளை தயாரித்து விற்க முடியாத நிலையில் உள்ள பொறியியலும், தொழிற்நுட்பமும் சாத்தியமாக்கப் போகின்றன உலகின் அழிவை...

தனக்கு தான் எல்லாம் தெரியுமென்றிருப்பது தலைக்கனம்...
தெரிந்ததைத் தெரியாதவர்க்குச் சொல்லாமல் இருப்பது உள்ளம் வறண்ட பாலைவனம்...
கடைசியில் சாதித்தது ஏதுமில்லை என் நெஞ்சே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Jul-17, 8:20 am)
பார்வை : 1872

மேலே