புதுக்கவிதை

அன்பெனும் நதியினிலே

சிறப்பு கண்ணதாசன் சான்றிதழ் ( 13 )

அன்பெனும் நதியினிலே
ஆசையுடன் முத்தெடுத்து
பண்புடனும் பாசமுடன்
பலர்போற்ற உருவாக்கும்
நன்னெறிகள் கற்பித்து
நாடாள வைக்கின்ற
முன்னோர்கள் நெறிதனையும்
முழுவதுமாய் அறிவுறுத்தி
பின்னாளில் வாழ்க்கையிலே
பிசகாது வாழ்ந்திடவும்
நன்னாளில் குடும்பத்தை
நலமாகப் பேணுதலும்
பொன்னாளே பூத்திடுமே
பொதுநலமே நின்றிடுமே .
கன்னலென சுவைதருமே
காவியமே கூடிவாழ்தல் !


பிறந்தவர் இறப்பதும்
பூமியில் பிறப்பதும்
துறந்தவர் துயில்வதும்
துன்பத்தில் ஆழ்வதும்
மறந்தவர் ரணங்கள்
மாறிட நினைப்பதும்
சிறந்தவர் அவரென
சிந்தையில் கொள்வதும்
உறவுகள் சூழ்ந்திட
உரமென உயிரினை
வரமாய் வாழ்வினில்
வகையுற அமைந்தால்
கரந்தனைப் பிடித்தே நான்
காலமெல்லாம் வாழ்ந்திடுவேன் .


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jul-17, 9:27 am)
சேர்த்தது : sarabass
Tanglish : puthukkavithai
பார்வை : 284

மேலே