வைபவம் படம் My Chennai page
பொன் குழம்பு சொட்டச் சொட்ட செவ்வானமதில், 'வகை வண்ணத்திரிபு வளம்'
வெள்ளிச்சாம்பல் நிறக் கடல், துள்ளித் தளும்புகையில்
அந்தியின் ஆரஞ்சு நிழல் படிந்த ஓர் அலைக்கீற்று
தொடுவானம் அனுப்பிய செய்தியாய்
எதையோ சொல்ல ஓடி வருகிறது
பிரபஞ்ச விந்தைகளை ஆழ சுகிக்கும்
அந்தச் சிறுமியிடம்...
வீசும் காற்று
அனைத்தையும் வருடிக்கொடுப்பது
ஒரவஞ்சனையற்ற ஒரே பரிவில் தான்
ஸ்பரிசிக்க மறப்பது மனிதன் மட்டுமே
நங்கூரம் பாய்ச்சியிருக்கும் மரக்கிளைக்கு தெரிந்திருக்கலாம்
ஏதோ ஒரு கோட்டில்
இணைக்கப்படுகிறோம் நாம் அனைவரும். . .