இன்றைய தாலாட்டு கவிஞர் இரா இரவி

இன்றைய தாலாட்டு!
கவிஞர் இரா. இரவி
பாட்டுப் பாடி தூங்க வைத்த காலம் போச்சு
பாட்டுப் பாடத்தெரியாத அம்மாக்கள் காலம் இது !

அன்று தாலாட்டில் வீரம் கற்பித்தார்கள்
அன்று தாலாட்டில் தாய்மாமன் பற்றிப் பாடினார்கள்!

மன்னர்களின் வீர வரலாற்றைப் பாடினார்கள்!
மண்ணின் எடுத்து இயம்பினார்கள்!

மலர்களின் வகைகளை பாட்டில் சொன்னார்கள்
மனங்களின் நிலைகளை தாலாட்டில் பாடினார்கள் !

நல்ல குணம் தான் பாட்டால் உணர்த்தினார்கள்
நல்ல மனிதர்களை அறிமுகம் செய்தார்கள் !

முதல் வகுப்பறையாக தொட்டில் இருந்தது
முதல் பாடமாக தாலாட்டும் இருந்தது !

நீதி போதனைகள் பாட்டால் நடந்தது
நீதி நேர்மையின் நன்மை விளக்கியது !

காந்தியடிகள் பெருமையும் பாட்டில் வந்தது
காமராசர் அருமையும் பாட்டில் வந்தது !

அறிவார்ந்த கருத்துக்கள் பாட்டில் இருந்தது
அறிவாளிகளாக குழந்தைகள் நாட்டில் வளர்ந்தன!

தாலாட்டைக் கேட்டு குழந்தைகள் தூங்கின
தாலாட்டுப் பாட்டுக்கு குழந்தைகள் ஏங்கின !

தாலாட்டு ஒப்பாரியில் முடிந்தது வாழ்க்கை
தாலாட்டு ஒப்பாரி இரண்டும் வழக்கொழிந்தது !

அன்றைய தாலாட்டு அற்புதமாக இருந்தது
இன்றைய தாலாட்டு இல்லாமல் போனது !

தாய்மார்கள் தாலாட்டைப் பழகுங்கள் இன்று
தாயின் கடமை ! தாலாட்டுப் பழகுதல் நன்று !

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (17-Jul-17, 10:26 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 49

மேலே