எனக்கெதுக்கு ஞானியென்ற பட்டம்

ஞானியென்ற பட்டமா? யாருக்கு வேண்டும்??
அப்பட்டத்தால் என் பசி தீருமா?
அடுத்தவர் பசி தீர்க்க முடியுமா?

யாருக்கு வேண்டும் இந்த உதவாக்கரை பட்டங்கள்?
யாவருக்கும் வேண்டும் இந்த ஞானம்...

பட்டங்களும், சிறப்புப்பெயர்களும் கர்வத்தின் அடையாளம்..
கர்வமே அகங்காரம்.,.
அகங்காரமே அதர்மத்தின் பிறப்பிடம்...

கவிஞர் பட்டம் சூட்டிக் கொண்டவரெல்லாம் கவிதை எழுதுவதில்லையே...
டாக்டர் பட்டம் சூட்டிக் கொண்டவரெல்லாம் நோய்யைக் குணப்படுத்துவதில்லையே...
பணக்காரர்களுக்கு பட்டங்களும் விருதுகளும் ஏராளம்...
ஏழை வாழ்வில் இல்லையென்ற சூழ்நிலையே தாராளம்...

எனக்கெதுக்கு ஞானியென்ற பட்டம்?
தவித்த வாய்க்குத் தண்ணீராகுமா?
பசித்த வயிறுக்கு உணவாகுமா??
பிணித்த நோய்க்கு மருந்தாகுமா???
எனக்கெதுக்கு ஞானியென்ற பட்டம்???

சட்டத்தைப் புரியாமொழியில் வைத்துக் கொண்டு,
ஏழை, எளிய படிப்பறிவில்லா மக்கள் சட்டத்தைப் பின்பற்றி வாழவில்லையென்று கூறும் நீதிமன்றத்தைப் போல உருப்படாத பட்டம் எனக்கெதுக்கு??

நீதியரசரென்ற பட்டம் சூட்டிக்கொண்டவன் வழங்கியதெல்லாம் நீதியாகும்?
காவல் துறை என்றே பெரிய விளம்பரம் செய்தவனானாலும் அவனால் அவனைக் கூடக் காக்க முடியாது எனதன்பே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Jul-17, 5:47 pm)
பார்வை : 778

மேலே