உயிரோவியம்
உயிரோவியம்
கவிதை by: பூ.சுப்ரமணியன்
மலராய்
மணம் பரப்பியிருந்தேன்
மனசெல்லாம்
நீ நிறைந்திருந்தாய் !
என்னை
நீ பார்க்காதபோது
குருடியைப்போல்
நான் தத்தளித்தேன் !
என்னை
அழகிலே ரதியென்றாய்
அறிவுலே கிளியென்றாய்
எண்ணிக் கூறியதெல்லாம்
விழலுக்கு
இறைத்த நீர்தானோ !
நீ எனக்காக
நட்சத்திரத்தோரணம்
கட்ட வேண்டாம் !
நிலவை குடையாக
பிடிக்க வேண்டாம்
உன் இதயத்தில்
எனக்கு இடம் கொடு !
கனவிலே வருகிறாய்
நினைவலைகளில்
மிதக்க வைக்கிறாய்
நனவிலே
இலைச் சருகைபோல்
நம் இனிய காதலை
நொறுக்குகிறாய் ?
எனக்கு
எழுதிய காதல்
கடிதங்களை சேர்த்தால்
காதல் கோட்டையே
கட்டி விடலாமே
கட்டிய காதலை
கலைக்கலாமா?
புரிந்து கொள்
காதல் நாயகனே !
உன்னை மணப்பதே
என் உயிர்த் துடிப்பு
உன் மனக்கதவு
திறக்கும் வரை
காத்திருப்பேன் !
அம்பிகாவதி காதல்
அமர காவியம்
அனார்கலி காதல்
கல்லறை ஓவியம்
என் காதலோ
உயிரோவியம் !
பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை சென்னை