காதல்

ஊடுருவிடும் உந்தன்
வேலொத்த பார்வையால்
என்னை அப்படியே
சுண்டி இழுத்து
உந்தன் இதயத்தில்
அடைத்துவிட்டாயே ஏன்?
என்று நான் கேட்டேன்
அவன் உள்ளத்தில் இருந்து,
அதற்கு அவன், என்னவன்
சொன்னான்,' ,அன்னமே
நீ என்னை சேர்ந்த செல்வம்
எனக்கு மட்டுமே தான் நீ
மற்றவர் உன்னை பார்த்தாலும்
கண் படுமே ,பிறர் கண் படுமே '
உந்தன் அழகு மேனியைக் கண்டால்
அதனாலே தான் என்றான்
பார்வையால் என்னுள்ளத்தைத் திருடிய
எந்தன் உயிர்க் காதலன் அல்லவோ அவன் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jul-17, 12:04 pm)
Tanglish : kaadhal
பார்வை : 67

மேலே