பிரிவு
நீயும் நானும்
பயணித்த பாதையில்
நீயின்றி .,...
உன் நினைவுகள்
மட்டுமே பயணிக்கிறது
இன்று என்னுடன் ....
உன் அருகில்
நொடிகளாய் கடந்த பயணம்
இன்று நீயின்றி
ஏனோ நீண்டுகொண்டே செல்கிறது ...
என் தனிமைக்கு ..
உன் நினைவுகள்
தருகிறது துணையாக
யாரும் என்னை கண்டிறாத
நேரத்தில் விழியோர நீராய்...