யாரோ என் தேவதை

யாரோ என் தேவதை?
மைவிழியில்
மையல் தருவாளோ?
தேன்மொழிகொண்டு
என் தாகம் தீர்ப்பாளோ?
அவள் கருவிழியிரண்டில்
என்னை மிரள வைப்பாளோ?
இரு விழிச்சுடரில்
என் வாழ்வை ஒளிர வைப்பாளோ?
அச்சுவெல்ல பேச்சுக்காரியோ?
ஆளைக்கொல்லும்
வாள்(ய்) வீச்சுக்காரியோ?
மச்சமுள்ள தேவதையோ?
என் இச்சை வெல்லும்
மோகினியோ?
தாமரைமலர்
முகத்தழகியோ?
தாழம்பூ
நிறத்தழகியோ?
கள்ளச்சிரிப்பில்
கவிதை தருவாளோ?
மெல்லச்சிணுங்கி
போதை தருவாளோ?
சாமுத்திரிகா இலட்சணத்தின்
சாயல் கொண்டிருப்பாளோ?
சமுத்திரம் கடந்துதான்
வாழ்கிறாளோ?
வெறுமையை விரட்டியடித்து
இனிமையோடு என்னுடன்
வருபவள் யாரோ?
பஞ்சமிலா பாசத்தால்
நெஞ்சமதில் நிறைபவள்தான் யாரோ?
என் அதியழகு தேவதை
அவள் யாரோ??