என்ன இது சிதறல் 06

என்ன இது

பெண் பிள்ளை
தலை குனிந்து
நடந்து பழகு
என்ற தந்தையின்
சொல்லை ஏற்காதா
என்னை ஏற்க
செய்தது ஏனோ
ஊடுருவும் உன்
ஆழமான பார்வை

அந்நிய ஆடவரை
நிமிர்ந்து பார்த்தல்
ஆகாது டீயம்மா
என்று அன்னை
சொன்ன அடக்கத்தையும்
மறக்க செய்தது
அந்த பார்வைகள்தான்

பார்க்காமல் பார்க்கும்
பரம ரகசியத்தையும்
ஒளித்து பார்க்கும்
கள்ளத்தனமான
ஒரவிழி பார்வைகளையும்
என் வயசுக்கு
கற்று தந்த
கள்ளன் நீ தான் !!

எழுதியவர் : யாழினி வளன் (19-Jul-17, 10:27 am)
பார்வை : 103

மேலே