நினைவிருக்கும்வரை காத்திருப்பேன்

ஏனோ தெரியவில்லை?
இன்றைய இரவு
இரவின் காதலனுக்கு பிடித்தமானதாக இல்லை..
தனிமையைத் தரும்
இரவின் சாயம் துடைக்க
வெள்ளைப் பூக்கள்
ஏந்தி வரும் வெண்ணிலா
வராமல் போனதாலோ?
இல்லை,
சிறையில் தவித்த
மந்திரப் புன்னகையை
மீட்டுத்தந்த
பெண்மையொன்று
'என்னை விலகிச்சென்றுவிடு' என்றதாலோ?
நேற்றுவரை விழிநீர்
துடைத்த விரல்கள்,
இன்று உன்னை
நேசிக்க வேறொரு
பெண் கிடைப்பாளென்று
விரல்கள் மடக்கிக்கொள்ளும்
அர்த்தம் என்னவோ?
அவள் போல் எவருமில்லை
என்பதை அவள்
புரிந்துக்கொள்ளாமல் போனதேனோ?
வண்ணங்கள் வீசி எறிந்த
பெண்மை
கருப்புவெள்ளை நினைவுகள்
மட்டும் விட்டுச்சென்றதேனோ?
உண்மையாக நேசித்த பெண்மை
நீ என்னருகே இருந்தால்
நிலவையும் சிறைப்பிடிப்பேன்
என்று நீ அறியாமல் போனதேனோ?
நீ என்னை பிரிந்தாலும்
உன் நினைவுகளின் துளிகள்
இன்னும் என் மனதில்
பிசுகிக்கொண்டுதான் இருக்கின்றன..
உன் நினைவுகளின்
ஈரம் காயும்வரை காத்திருப்பேன்
நினைவிருக்கும் வரை!