ஆதங்கம்

பல கிளைகள்
கைகளாக இருக்க
கால்கள் மட்டும்
ஒன்று தான்
என்று முடமாக்கி
ஒற்றைக் கால்
உயிரினமாய்
நிற்க விட்டான்
இரட்டை கால்கள்
உள்ள மனிதர்கள்
காப்பார்கள் என்ற
நம்பிக்கையில்
உண்மை தான்
அவன் நம்பிக்கை
வீண் போகவில்லை
நன்றிக் கடனாய்
நாங்களும்
பலவாறாய் உதவினோம்
உதவிதான் எங்களுக்கு
உபத்திரவம் ஆனது
பேராசையும் சுயநலமும்
போட்டி போடுகிறது
எங்களை அழித்துவிட
இன்னொரு கால்
இருந்தாலும்
நகர்ந்து விடுவோம்
இன்று தப்பிக்க
வழியின்றி தவிக்கின்றோம்
ஏதேனும் வழியிருந்தால்
சொல்லுங்களேன்
எனக்காக வேண்டாம்
உங்கள் சந்ததிக்காகவாவது.
#sof #sekar