அவள்
![](https://eluthu.com/images/loading.gif)
அவள் கண்களுக்கு தெரியும்
இமையாக இருப்பது நான் என்று
அவள் இதயத்திற்கும் தெரியும்
இரத்தமாக இருப்பது நான் என்று
அவள் இதழ்களுக்கு தெரியும்
குரல் நான் என்று
அவள் கனவுகளுக்கு தெரியும்
நினைவாகும் கனவு நான் என்று
இன்று
அவள் மனதிற்கு மட்டும்
ஏனோ தெரியவில்லை அவளை
மணக்க நினைப்பது நான் என்று