இறக்கை முளைக்கும் முன்னே

சிறு ஓட்டுக்கூட்டில்

எனை கருவாய்

சிறை வைத்து

நான் உருவாக

ஒரு முறை வைத்த

சூட்டில் இருந்து
விடுபட்டு

சுதந்திரக் காற்றை
சுவாசித்தப்பின்னே

இயற்கை போட்ட
முடிச்சை

அவிழ்த்த பூரிப்பில்

இறக்கை முளைக்கும்
முன்னே

பறந்து போக
துடிக்கின்றேன்

மனிதர்கள் கைய்யில்
சிக்காமல் தப்பிக்க!
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (24-Jul-17, 9:57 pm)
பார்வை : 283

மேலே