வானவில்
வானவில்லை பார்த்து மகிழ்ந்த நான்
அதில் ஏழு நிறங்கள் பார்த்து என்னே
என்னே இறைவனின் விந்தை தரும்
ஓவியம் இது என்று எண்ணுகையில்
எனக்கு ஓர் அறிய உண்மையும் தோன்றியது
அது தான் ஏழு நிறங்கள் தந்த இறைவன்
அதில் கருப்பும் வெள்ளையும் தீட்டவில்லையே
ஏன்? என்று யோசித்தபோது என் கண்முன்னே
கருநீல வண்ணன் கண்ணன் தோன்றினான்
" கடவுள் நான், கருமையை எப்போதும் விரும்புவதால்
அது என்னில் ஐக்கியம் ,என் உள்ளம் எப்போதும்
தூய்மையாய் இருப்பதால் வெண்மையும்
என்னுள் ஐக்கியம் ", இப்போது புரிந்தது
வானவில் நிற ரகசியம் .

