நண்பர்கள் அழிவார்கள் நட்பு அழியாது

நான் உன்னை பார்த்து விட்டேன் தோழி ...

பல ஆயிரம் மைல் கடந்து ...
பல ஆண்டு கடந்து ...
நாம் மீண்டும் சந்தித்து விட்டோம் ...

உறைந்து நிற்கிறேன் ...
மகிழ்ச்சியில் வார்த்தை வர மாட்டேன் என்கிறது ...
சந்தோசத்தில் கண்ணீர் வருகிறது ...

விரைந்து சென்று அணைத்துக்கொண்டோம்...
நேரம் புதிதாக பிரசவிக்கிறது எங்களின் பசுமைகளை...
அணைத்தபடியே நின்றும் வார்த்தையை எடுக்க முடியவில்லை ...
தலையை வருடி ...எப்படி இருக்கிறாய் தோழி என்று இருவரும் சம நேரத்தில் சொல்கிறோம் ...
சிரித்துக்கொண்டே இருவரும் நலம் சொல்கிறோம் ...
கைகோர்த்து அழகான நினைவுகளை சுமந்து அந்த பசுமைகளை மீண்டும் வாழப்போகிறோம் ...

எங்களின் முகம் சிறிது மாறி இருந்தாலும் அகம் மாறவில்லை ...
எங்கள் தோள் சுருங்கி இறக்கும் காலம் வந்தாலும் நட்பு சுருங்காது ...
மனிதனுக்கு தான் அழிவு ...நட்புக்கு கிடையாது ...
எல்லோரும் ஒரு நாள் பிறப்பது போல் இறக்க வேண்டும் ...அது தான் நியதி ...
அந்த இடைப்பட்ட வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் எல்லாம் கலந்து வரும் ...
ஆனால் என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்
என் தோழி எப்பொழுதும் நலமாக இருப்பாள் ...
மகிழ்ச்சியாக இருப்பாள் ...
எல்லா வளங்களும் பெற்று முன்னோக்கி சென்று கொண்டிருப்பாள் ...
எண்ணத்திற்கு பலம் உண்டு ...
என் மனதில் நினைப்பதே அவள் வாழ்க்கையில் நடக்கும் என்று நம்பிக்கை உண்டு ...

நீ என்னோடு இல்லை என்று யார் சொன்னது தோழி ...
என்னை விட்டு பிரிந்து விட்டாய் வர முடியா தூரத்தில் என்று யார் சொன்னது தோழி ...
என் மீது நீ வைத்திருக்கும் பாசம் எனக்கு தெரியும் ...
நீ எங்கே இருக்கிறாய் தெரியுமா ...
என் இதயத்தில் ...
என் துடிப்பு நிற்கும் பொழுதும்
நட்பின் நினைவுகள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டே இருக்கும் ...

நாம் ஒருவரை ஒருவர் மறந்து விட்டோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ...
அவர்களுக்கு தெரியுமா உண்மை நட்பு என்றும் சாகாது என்று ...
ஆமாம் தோழி ...
ஒருவர் மனதில் இன்னொருவர்
பள்ளிப்பருவத்தில் வாழ்ந்த அதே நட்போடு வாழ்கிறோம் ...
நாம் மரித்தாலும் நம் நட்பு சாகுமா ???...

தோழி ...
வண்டி வருது டி ...
என்று கைபிடித்து இழுக்க ...
தலையில் கொட்டி நடக்க ஆரம்பித்தோம் ...
இருவரும் பூங்காவில் அமர்ந்து இயற்கையை ரசித்து விட்டு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தோம் ...
தூரத்தில் கலவரம் வண்டிகள் ஓடாது
சீக்கிரம் வீட்டுக்கு போங்க என்று வந்து யாரோ கத்த...
எல்லோரும் ஓடுகிறார்கள் ...
நானும் தோழியும்
ஒருவர் கையை ஒருவர் விடாமல் பிடித்துக்கொண்டோம் ...
கூட்டத்தில் ஒரு சின்ன குழந்தையை எல்லோரும் ஓடும் வேகத்தில் தூக்காமல் கூட
மிதித்து கொண்டு செல்ல பார்த்தார்கள் ...
அவனை தூக்கிக் கொண்டு வெளியே வந்தோம் ...
அவன் கையில் இருந்த ரோஜாவிற்கு காயம் படவில்லை ...ஆனால் அந்த ராஜாவிற்கு தான் சின்ன காயம் ...
அவள் அம்மா மகனை காணவில்லை என்று துடிக்க ...
நாங்கள் அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு ...
அந்த குழந்தைக்கு முத்தமிட்டு ...
உடனே மருத்துவமனை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லலை விட்டு ...
அவனுக்கு புன்னகைத்தபடி கை அசைத்துக்கொண்டே வந்தோம் ...

அப்பொழுது வேகமாக காவி உடை அணிந்த ஒருவன்
ஓடி வந்து கட்டையால் தோழியை தாக்க முற்பட ...
அவன் கையை பிடித்து ...ஓங்கி ஒரு அரை அரைந்தேன் அவன் கன்னத்தில் ...
ஏனய்யா என்னத்தான் உங்களுக்கு வேண்டும் ரத்தமா ...
உன் உடம்பில் கூட ஓடுகிறது ரத்தம் ...
உன் மண்டையை உடைத்து காண்பிக்கட்டுமா ....
அவள் மதம் எனக்கு பிடிக்காது ...
செருப்பை கழட்டி பளார் பளார் என்று வைத்தேன் ,,,
ஏ பாவம் டி விட்டு விடு
பேசி புரிய வைப்பவர்களிடம் தான் டி பேச வேண்டும் ...
இதெல்லாம் மதம் பிடித்த நாய் ...
அதே நேரம் வேறொருவர் வந்து என்னை தாக்க என் தோழி அவர்களை அடித்தாள் ...
நாங்கள் இருவரும் ஓன்று தான் ...
வேறு வேறு இல்லை ....
புரிந்து கொள்ளுங்களேன் ...
ஐயோ கடவுளே ரத்தம் வருகிறதே....
உனக்கு ரத்தம் தானே வேண்டும்
என்னை முதலில் கொல்...
எவ்வளவு சொல்லியும் எல்லாம்
விழலுக்கு இறைத்த நீரானது ...
என் தோழியை என் கண்முன்னே தாக்கினான் ...
என்னால் தடுக்க முடியவில்லை ...
என்னை வேறொருத்தன் கொன்று கொண்டிருந்தான் ...
இருவரும் ஒருவரை ஒருவர் தாங்கி பிடித்துக்கொண்டு
கை கோர்த்தபடி கீழே விழுந்தோம் ...
சிரித்துக்கொண்டோம் ....
ஒன்றாக ஒரே நேரத்தில் கண்மூடிவிட்டோம் ...

நண்பர்கள் அழிவார்கள் ...நட்பு அழியாது ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Jul-17, 7:39 am)
பார்வை : 598

மேலே