நட்பு
நடை பிணம்போல் தினம் தினம்
சென்று கொண்டிருந்தவன் -இன்று
தலை நிமிர்ந்து வீர நடை போட்டு
வீதியில் வருகிறான் எப்படி என்று
ஒருவரைப் பற்றி மற்றோரு ஊர்க்காரர் வினவ
அந்த மற்றோருவர் கூறினார்
'இது உனக்கு தெரியாதா ,அவன் இன்று
அறிய' நண்பனைக் கண்டு கொண்டானாம்
அவன் நட்பில் மின்னும் இந்துவாய்
இப்போது சிம்ம நடை போட்டு
வருகிறான் நட்பில் வெற்றி கண்டு'.
வாழ்வாங்கு வாழவைக்கும் நல்ல
நண்பன் நட்பு .