நட்பு
எப்படி சொல்வேனடா நண்பா
உன் நட்பின் பாங்கை ?
தூங்கா விளக்கு என்று சொல்லவா
கலங்கரை விளக்கு என்று சொல்லவா
தேயா குளிர் நிலவொளியோ உன் நட்பு
இல்லை எரிக்கா ஆதவன் ஒளியா?
என்னென்று கூறுவேன் எப்படி சொல்லி அழைப்பேன்
உன் நட்பாம் மழையில் நனைந்து இன்புற்று
குளிர் காய்ந்து ......................
உன் நட்பை நினைக்கையில் சொல்வதறியாமல்
திக்கு முக்காடி போகிறேனடா
எப்படி சொல்வேனடா நண்பா
உன் நட்பின் பாங்கை
எப்படி சொல்வேனடா ?