உடன்பிறவா உயிர் எழுத்து

மூத்தவன் இல்லையென்ற-என்
முதல் குறையின் முதுகெலும்பை முறித்தவனே
மூன்று வருடம் ஆகிருச்சு
உனக்கான பிறந்தநாளே
உன்னோடு கொண்டாடி...

ஆழ்கடலின் அலைபோல
அமெரிக்காவின் அந்த சிலை போல
என் உறவுக்கு அழகு சேர்த்த
உடன்பிறவா உயிர் எழுத்தே
உன்னை வாழ்த்த நினைக்கும்- என்
உள்ளத்திற்க்கு எத்தனை மகிழ்ச்சி..!

என் இதயத்தில்
எத்தனையோ உறவிருந்தாலும்
என் இதயமாக ஒரு உறவென்றால்
அது நீ மட்டும்தான் அண்ணா

அன்னையின் அன்பையும்
தந்தையின் அரவனைப்பையும்
ஒரு சேர தந்தவன் நீ

நீங்கள் மண்னில் பிறந்த இந்த நாள்
உங்களுக்கு எப்படியோ
எனக்கு திருநாள்தான்

பசுமை மாற உன் நினைவுகள்
படர்திருந்த என் மனதினுள்
உன் பிறந்தநாளே
விடுமுறை தினமாக கொண்டாட போகிறேன்...

என் ஏழு ஜென்ம ஆயுளையும் சேர்த்து
எழனூரு ஆண்டுகள் நீ வாழ்ந்து
என்னையும் வாழ்த்து அண்ணா....

எழுதியவர் : ந.இராஜ்குமார் (26-Jul-17, 11:45 pm)
பார்வை : 3487

மேலே