ஏழையின் புலம்பல்
ஏழையின் புலம்பல் !
கவிதை by :கவிஞர் பூ.சுப்ரமணியன்
நாட்டில்
எண்ணமுடியாத
வண்ணக்கட்சிக் கொடிகள்
எங்கும் பறக்கும்போது...
வீட்டில்
வசிக்கும் எங்களுக்கு
கட்டிக்க ஆடை
எப்படிக் கிடைக்கும் ?!
நாட்டில்
பதவியில் தொடரவும்
பதவியை கைப்பற்றவும்
சுயநல அரசியல்வாதிகள்
ஓயாமல் பேசிக்கொண்டிருந்தால்
எங்கள் நிலைபற்றி
எப்போது பேசுவார்கள் ?
பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

