நீயாகிய நான் ---முஹம்மத் ஸர்பான்

நேசமானவள்
புன்னகையில்
இளம் மனது
கல்லடி வாங்கி
துடிக்கின்றது
நீ யோசிக்கும்
போது தான்
நான் உலகில்
கவிஞனாக
விரும்புகிறேன்
சந்திரனின்
முத்தத்திலும்
பூங்காற்றின்
சுத்தத்திலும்
உன்னுடைய
துப்பட்டாக்கள்
கவிஞர்களை
நெய்கின்றது
நீ அருந்தும்
தேநீரில்
என்னிதயம்
எறும்பாக
நீந்துகின்றது
உன் கண்களின்
தண்டவாளத்தில்
பார்வையெனும்
புகையிரதம்
எல்லை இன்றி
ஓடிப் போகிறது
உன் விழிகளின்
அஞ்சல்களை
உயிராக வாங்கி
சுவாசிக்கின்ற
காதல் உலகின்
தபால்காரன்
❤️நீயாகிய நான்❤️