en anbu thamariye
தள்ளி போன உடனேயே
துள்ளி குதித்தேன் உந்தன்
வருகையை எண்ணி...
தாவணி அணிந்து நாணப்பட்ட
நான் தாமரை கைகால்
அசைத்திட உருகினேன் வெண்
பணியாக....
தரையில் பாதம் தொடா பனி
பூவை உச்சி நுகர்ந்தேன் முதல்
முறை தாய்மை பாக்யத்தோடு
மணவாளன் விரல் தீண்டியதால்
மங்கையான நான் மாதா ஆனேன்...
ஏழு ஜென்மம் நான் செய்த
தவத்திற்கு என் மடியில்
தவழும் மல்லிகையே....
உன் ஆயுள் வரை காத்து ரட்சிப்பேன் என் கண் இமைக்குள்....