அனுஷா தேவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அனுஷா தேவி
இடம்:  செங்கோட்டை
பிறந்த தேதி :  26-Apr-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Sep-2016
பார்த்தவர்கள்:  185
புள்ளி:  53

என்னைப் பற்றி...

நான் பிறந்தது பைந்தமிழ் தவழும் பொதிகை மலையருகினிலே...\r\nசிறு வயது முதல் தமிழ் இலக்கியத்தின் மீது அளவற்ற பற்று கொண்டிருப்பேன். கல்லூரி காலங்களில் எண்ணற்ற கவிதை போட்டிகளில் இடம் பெயராமல் இருந்ததில்லை என் பெயர். நான் இதுவரை எழுதிய கவிதைகள் என் வீட்டின் பூட்டுடைந்த மர பெட்டிக்குள்! இனி எழுத போகும் காவியங்கள் என் தமிழ்த்தாயின் கார் குழல் ஒதுங்கும் பொன் செவி ஓரத்தில்! தமிழ் மொழி மங்குகிறது என்று கூறுவார் மடமையான சில மானிடர்கள்! என்னை பொறுத்தவரையில் கவிஞர்கள் இருக்கும் வரை காணாது தமிழ் மொழி இறுதி நாளை.. எனக்கு பிடித்தது வசித்தாலும், எழுதுவதும் ரசிப்பது இயற்கையும் மெல்லிசையும் நன்றி................ வணக்கம்...........

என் படைப்புகள்
அனுஷா தேவி செய்திகள்
அனுஷா தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2017 8:28 pm

தள்ளி போன உடனேயே
துள்ளி குதித்தேன் உந்தன்
வருகையை எண்ணி...
தாவணி அணிந்து நாணப்பட்ட
நான் தாமரை கைகால்
அசைத்திட உருகினேன் வெண்
பணியாக....
தரையில் பாதம் தொடா பனி
பூவை உச்சி நுகர்ந்தேன் முதல்
முறை தாய்மை பாக்யத்தோடு
மணவாளன் விரல் தீண்டியதால்
மங்கையான நான் மாதா ஆனேன்...

ஏழு ஜென்மம் நான் செய்த
தவத்திற்கு என் மடியில்
தவழும் மல்லிகையே....
உன் ஆயுள் வரை காத்து ரட்சிப்பேன் என் கண் இமைக்குள்....

மேலும்

அன்பு அவிழ்வது தாய்மையிடத்துமட்டும் தடையற்ற ஓன்று!!! அருமை 29-Oct-2017 8:07 pm
அனுஷா தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2017 11:17 am

பருவத்தில் ஒரு முறை பூத்தேன்
உந்தன் நெருக்கத்தில் பூக்கிறேன் ஒவ்வொரு முறையும்....
கனவுகளோடு வாழ்ந்த நான்
கண்ணாலன் கைகோர்த்து
செல்கிறேன் இனி வாழும்
ஒவ்வொரு நொடியும்...
மஞ்சளினால் குளிர்ந்த என்
முகம் மணவாளன் முத்தத்தாலே
குளிர்கின்றது முப்பொழுதும்...
மருதாணி வைத்து சிவந்த
எந்தன் உள்ளங்கை தலைவனின் குழல் வருடியே
சிவந்து போகிறது...
சத்தமின்றி வரம் கேட்கிறேன்
நித்தமும் உன் மடி சேர...

மேலும்

காதல் உணர்வில் கரைகிறது இக்கவிதை.வாழ்த்துக்கள் 29-Oct-2017 8:04 pm
செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) selvamuthu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jan-2017 11:08 am

உன்னை காதலித்தேன்
நீ கவிதையானாய்
நான் கவிஞனானேன்...
என்னை நீ காரணமில்லாமல் மறுத்து ஒதுக்கி
வேறொருவனை கரம் பிடித்து
வாழ்க்கையில் அமர்ந்துவிட்டாய்...
நானோ..
எனக்கு நானே இரங்கல் கவிதை
எழுதிவைத்து
இறைவனடிக்காக
காத்திருக்கிறேன்..
உன்னை மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
நான் இறக்கவும் வழி இல்லாமல்
வாழ்கிறேனடி...

மேலும்

Thanks a lot Anusha for your comments... 10-Jan-2017 9:44 am
Miga arumai... 10-Jan-2017 9:38 am
அன்பு நண்பன் ராகுல் தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி... 09-Jan-2017 10:55 pm
அழகு கவி தோழா மயக்கம் தெளிய வழி காணுங்கள் 09-Jan-2017 4:08 pm
சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) sivram மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2017 10:51 pm

நான் அவளுக்காகப் பிறந்தவனாக
இல்லாமல் இருக்கலாம். - ஆனால்
அவளுக்கான கவிகளை
அழகாக எழுதப் பிறந்தவன்.
என்னைப்போல் அவள்
நினைவுகளையோ அவள் மீதான
எண்ணங்களையோ எழுதிய
ஒருவனையாவது காட்டிவிடட்டும்
நான் அவளை பற்றி
எழுதுவதை நிறுத்திவிடுகிறேன்.

அவளுக்குத்தான் கொடுத்த்து வைக்கவில்லை
அவளை பற்றிய எழுதிய கவிகளை படிக்க...

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி தோழியே... 10-Jan-2017 9:40 am
Miga arumaiyana kavi... 10-Jan-2017 9:36 am
கருத்துக்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி... 09-Jan-2017 11:14 pm
அனுஷா தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2016 11:58 am

என் உயிரின் ஸ்பரிசமே
என் சுவாசத்தின் வாசமே
என்னை விட்டு பிரிந்திட
உனக்கு மனம் வந்ததா
அன்றொரு நாள் பிறை நிலவை
உனக்கு தூதாக அனுப்பினேன்

திமிர் கொண்ட நிலா
தேய்ந்ததால் என்னை
மறந்து போனது...

போனது போகட்டும் என்று நாரையை அனுப்பி வைத்தேன்...

மீனிற்காக காத்திருந்த
வேளையிலே நாரை
என்னை மறந்தது...

மேக கூட்டதிடம் மெதுவாக
சொல்லியனுப்பினேன்...

களைந்து கூடும் சமயத்தில்
அது கன நேரத்தில்
நினைவற்று போனது...

பொறுத்தது போதும் என
என் நினைவு எனும்
கிளியோடு உயிர் என்ற
சீட்டெழுதி அனுப்பினேன்...

உயிரற்ற என் சடலத்தை
காண வருவாயா...

பிணமாக காத்திருக்கிறேன்
நீ வரும் வரை

மேலும்

கடைசி வார்த்தையில் கலங்கவைத்துவிட்டீர்கள்வா., வாழ்த்துக்கள் ! தொடருங்கள் நன்றி 09-Nov-2016 3:51 pm
சுமைகள் போக இனிமைகள் மீதி காதல் வாழ்க்கையில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2016 6:33 am
அனுஷா தேவி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2016 7:24 pm

கிச்சுகிச்சு மூட்டும் போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...
கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு

மொட்டமாடி தூக்கம் ..
திருப்தியான ஏப்பம்...

கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...

நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும் குழந்தை..

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..
பாட்டியிடம் பம்மும் தாத்தா ...

தலைவர் படம் First day first show ticket கிடைத்தவுடன் விடும் பெருமூச்சு ...
தாகம் தணித்த bore well pipe தண்ணி ..

பத்து ரூவா change குடுங்கனு, கடைக்காரன் மூஞ்சிய காட்டும்போது , எப்பவோ purse ல வெச்ச இத்து போன

மேலும்

மிக அழகான ரசனைகள்!!! 27-Oct-2016 7:16 pm
கங்கைமணி அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jul-2016 1:53 pm

ஆடிப்பெருவிழாவாம்
அழகர்தம் திருவிழாவாம்
கூடி மனிதரெல்லாம்
கொண்டாடும் ஓர்விழாவாம்

பச்சைப்பட்டுடுத்தி
பவளத்தில் மணிகளிட்டு
தங்கத்தில் தலைப்பாகை
தரித்த நற் மலர்முகதோன்

செங்கதிர் மேனிதாங்கி
சங்கு கரத்தழகர்
பொங்கும் மனிதவெள்ளம்
எங்கும் கரைபுரள
எழுந்தருளக்கண்டு!

கொட்டும் குலவையுமாய்
கும்மாள குதூகளமாய்
குளத்துக்கரை மீனாய்
குதிக்கும் மனங்களெல்லாம்

பக்திப்பரவசத்தில்
முக்தி நிலை வேண்டி
நெஞ்சக்கதவுகளை
நெகிழ்ந்தே தான் திறந்து ,
அண்டசராசரமனைத்துமானவனை
அழகர் மலைச்சாரல்
அருவிநீராக-
ஓடிவரவேண்டி
உள்ளம் உருகிடுவர்.,
அழகர்மலையானின் அருளைத்தான்பெற்று
அமைதிவாழ்வெடுத்து

மேலும்

நன்றி தோழி வரவால் மகிந்த்தேன் 29-Oct-2016 3:03 pm
அருமையான கவி தோழரே!!! இன்னும் தொடரட்டும் உம் கவிப்பயணம் !!! 27-Oct-2016 7:12 pm
நன்றி 07-Jul-2016 9:24 am
நல்ல கவிதை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jul-2016 6:10 am
அனுஷா தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2016 6:20 pm

நீல நிற ஆகாயத்தின் மேலே
சந்தனமும் கரிய மையும் கலந்து போனது!!!

சங்கமித்த வண்ணங்களை சண்டையிட்டு
விலகி விடுவது வெள்ளி கம்மியான மின்னல் கீற்றுகள்!!!

சூரியன் விடுமுறை எடுத்து கொண்டது
சந்திரன் சாயங்கால வருகைக்காக காத்திருக்கிறது!!!

அதுவரை தூசி படர்ந்த பச்சை இலைகள்
மழை துளிகள் பட்டு சாயம் தெளிந்து போனது!!!

மஞ்சள் நிற பூக்களெல்லாம் மழைநீரில் நனைந்து
முக்குளித்து நிற்கிறது தங்க முத்துக்கள் போல!!!

நனைந்த காக்கைகள் விறைத்து நின்றாலும்
சிறகை குஞ்சுகளை அரவணைத்து காத்தது!!!

வெக்கையின் தாக்கத்தால் வாழ்ந்த நாய் குட்டிகள்
குப்பை தொட்டில் எச்சி இலையின் கீழே படுத்துறங்கியது!!!

மேலும்

அழகாக்கத்தொடங்கி ஒரு நிகழ்வாகத்தொடர்ந்து மனதில் நிலைத்துவிட்டது ஒரு அழகான பெண்மையின் நிகழ்வு. வாழ்த்துக்கள் தோழி ! 31-Oct-2016 11:53 am
நன்றி தோழரே!!! 26-Oct-2016 11:33 am
மிக அழகான படைப்பு 26-Oct-2016 8:30 am
அனுஷா தேவி - அனுஷா தேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2016 3:58 pm

முழுமையாக ஒருநாளும் வளர விட்டதில்லை
என் தாய் வீட்டின் மல்லிகை மொட்டுகளை!!!

அலங்கரித்த அலுத்து போவேன்
அனுதினமும் மனப் பெண் கோலத்தில்!!!

என் அங்கத்தில் கரை அடைந்தாலும் அனுமதிப்பேன் அழகிய
முந்தானையில் அரைப்புள்ளி அளவிலும் அழுக்கு படிய விட்டதில்லை!!!

உடுத்தும் புடைவைக்கு ஒரு நாளும்
மாறான வண்ண வளையல்களை அணிந்ததில்லை!!!


இருப்பினும் இன்றோ!!!

வீட்டை சுற்றி நிற்கும்
பூக்கள் அடர் வனமாக மாறிய பின்னும்
கிள்ளி எடுத்து சுட முடியாமல்
தயங்கி நிற்கிறேன் தளர்ந்து போன கைம்பெண்ணாக!!!

மேலும்

போற்றுதற்குரிய அரிய சிந்தனைக்கு கருத்துள்ள படைப்பு :-- சமூகத்தில் நிலவும் பெண்கள் பிரச்சினைகளுள் மிகவும் முக்கியமானது கைம்பெண் பிரச்சினை ஆகும். பொதுவாகவே, சமூகத்தில் கைம்பெண்களின் நிலை சற்றுத் தாழ்வானதாகவும் இரண்டாம் தரக் குடி மக்களாக நோக்கத் தக்கதாகவும், பாதுகாப் பற்றதாகவுமே இருந்து வருகிறது. கைம்பெண்கள் மறுமணம் செய்து கொண்டு தக்கத் துணையோடு வாழ்வதில் இன்று சட்டப்பூர்வத் தடை ஏதும் இல்லை. பலர் இப்படி மறுமணம் செய்து கொண்டு நல்ல நிலைமையில் சிறப்பாகவே வாழ்ந்து வருகின்றனர். என்ற போதிலும் இன்னமும் சமூகத்தில் அதற்கு உரிய அங்கீகாரம் கிட்டாமலே, அதாவது சாதாரணத் திருமணங்களைப் போலவே கைம்பெண் மணங்களையும் நோக்குமளவுக்கு நடத்துமளவுக்கு சமூகம் பக்குவம் பெறாமலே உள்ளது கைம்பெண்கள் பொது இட நிகழ்வுகளுக்கு வரக் கூடாது, ஆண்களோடு பழகக் கூடாது, பொட்டு வைக்கக்கூடாது, பூ வைக்கக் கூடாது, வண்ண ஆடைகள் உடுத்தக் கூடாது, அணிகலன்கள் அணியக் கூடாது, நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது, பால் வேட்கையைத் தூண்டும் சத்துள்ள உணவுகளை உண்ணக்கூடாது, மென் படுக்கையில் துயிலக் கூடாது என்பது முதலான மனித உரிமை மீறல் கருத்துகளை வலியுறுத்தி காலாகாலத்துக்கும் இவர்கள் கைம் பெண்ணாகவே வாழவேண்டும் என்கின்றனர். 16-Nov-2016 4:57 pm
ஆஹா சிறப்பாக எழுதுகிறீர்கள் வீட்டை சுற்றி நிற்கும் பூக்கள் அடர் வனமாக மாறிய பின்னும் கிள்ளி எடுத்து சுட முடியாமல் (எடுத்து விட முடியாமலா ?) தயங்கி நிற்கிறேன் தளர்ந்து போன கைம்பெண்ணாக!!! ----மலரில் மனம் பறி கொடுக்கும் கைம் பெண்ணின் மனத்தினைப் பிரதிபலிக்கும் சிறப்பான வரிகள் . அன்புடன்,கவின் சாரலன் 14-Nov-2016 5:34 pm
வலியைக்கொடுத்த வரிகள்.உலகம் நமது சந்தோஷத்திற்க்காகமட்டுமே அனைத்தையும் படைத்திருக்கிறது.சபித்து உணர்வுகளை சடலமாக்குவதில் என்னஇருக்கிறது.ஆணும் பெண்ணும் மருமணமென்ற மாற்றத்தை நாடவேண்டுமென்பதே இன்றயத்தேவை. கைம்பெண்ணுக்கு மட்டுமென்ன மல்லிகை வாசம் மனக்காமலாபோகும்.மதிகெட்ட உலகம் மங்கையரை மடமையாக்குவதிலேயே குறியாக இருக்கிறது.இது என்று மாறுமோ...எம்பெருமானுக்கே வெளிச்சம் !... 14-Nov-2016 2:08 pm
உண்மையான கருது தோழரே!!! பாராட்டுக்கு நன்றி!!! 21-Oct-2016 10:37 am
அனுஷா தேவி - அனுஷா தேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2016 5:30 pm

தமிழ் மொழி அறிந்த பின்
தாய் மொழி மறந்து போவார் கவிஞர்கள் பலர்!!!

இலக்கியம் அறிந்த பின்னே
என்னையே மறந்தேன் அடிக்கடி

எழுத எழுத மோகம் கொள்ளுது
பேனாவின் மையும் பேசும் காகிதமும்

உன்னை படிக்க படிக்க பழகிக் கொள்ளுது
எந்தன் பல்லும் நாவும்!!!

அடடா!!!
எத்துணை அழகு
எத்துணை அடக்கம் !!

எத்தனை எழுத்துக்கள் உனக்கு சொந்தமாக இருந்தாலும்
எழுத்தொன்று சிக்கவில்லை என்னிரு இதழுக்குள்!!!

இருந்தாலும் எடுத்து கூறுகின்றேன்
யான் அறிந்த சில வரிகளோடு...

இரண்டு கை இரண்டு கால் என்பதை
உணர்த்த தான் இரண்டடி குறள்!!!

ஐந்தும் ஒன்றே ஆயினும் வேறே என விரலுக்கு ஈடாக
தமிழின் ஐம்பெரும் காப்

மேலும்

பாராட்டுக்கு மிக்க நன்றி தோழி... 15-Oct-2016 1:43 pm
தமிழின் வாசனை இன்றல்ல,என்றும் நிலைத்திருக்கும் அனைவர் மனதிலும். கவிதை அருமை தோழி..! 15-Oct-2016 1:31 pm
உங்களின் கருத்துரைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்த கொள்கிறேன் தோழரே!!! 15-Oct-2016 1:24 pm
வாழும் வரை தமிழால் தான் எம் மூச்சு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Oct-2016 8:33 am
அனுஷா தேவி - குமரிப்பையன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2016 1:14 am

💧💦 தாமிரபரணி 💦💧

தாமிரபரணி நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் தோன்றி தூத்துக்குடி கடலில் கலக்குது. தமிழ்நாட்டில் தோன்றி தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்குற நதி இது. நெல்லை தூத்துகுடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுகிறது!

இப்படி சிறப்பு மிக்க தாமிரபரணிக்கு இப்போ என்னாச்சினு!!! கேக்குறீங்களா?
சில பேருக்கு தெரிஞ்சிருக்கும்..... எல்லாருக்கும் தெரியனும்னு நினைக்கிறேன்.
நம்ம தமிழ்நாடு அரசு அடுத்த 99 வருசத்துக்கு 3600ரூபாய்க்கு தண்ணிரை குத்தகைக்கு விட்டிருக்கு?!!?

ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணிர் Pepsi கம்பெனி உறிஞ்சி எடுக்க போகுது,,.. கங்கை கொண்டான்ல அமையப்

மேலும்

உங்கள் அறிவிப்பிற்கும், ஆழ்ந்த பற்றிற்கும் நான் பெருமை படுகிறேன். இது போன்ற நிகழ்வுகள் கடந்த அய்ம்பது வருடமாக நம் தமிழகத்தில் நடை பெற்று கொண்டு தான் இருக்கின்றது. நம்மை போன்று எத்தனையோ பேர் இதை தட்டி கேட்டு நியாயம் கிடைக்காமல் போனது பழக்கமே. எத்தனையோ எதிர்ப்பு தோன்றினாலும் என்ன தன் நடந்தாலும் கூடங்குளம் , மீத்தேன் போன்று தான் இதுவும். ஏனென்றால் இன்றைய கால கட்டத்தில் நம் தமிழகம் கேட்பாரற்ற கை குழந்தையாய் மாறி போனது. தாமிரபரணி ஓரத்தில் இருக்கும் ஊர்காவலன் அய்யனாரப்ப நினைத்தால் கூட தமிழகம் இனி மாறாது. எல்லாம் நம் விதி. 30-Sep-2016 1:29 pm
ம்ம்ம்ம்ம் கண்டிப்பாக 23-Sep-2016 11:17 am
தெரிந்தவர்களிடம் இந்த தகவலை அதிகமாக பரப்புங்கள்.! 20-Sep-2016 9:25 am
ம்ம்ம்ம் கண்டிப்பா எதாவது பண்ணியே ஆகனும்.................................... விடக்கூடாது ......... 15-Sep-2016 11:07 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மஅனிற்றா ஜான்சி

மஅனிற்றா ஜான்சி

எட்டயபுரம்
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
மேலே