kaathirukum kanni
என் உயிரின் ஸ்பரிசமே
என் சுவாசத்தின் வாசமே
என்னை விட்டு பிரிந்திட
உனக்கு மனம் வந்ததா
அன்றொரு நாள் பிறை நிலவை
உனக்கு தூதாக அனுப்பினேன்
திமிர் கொண்ட நிலா
தேய்ந்ததால் என்னை
மறந்து போனது...
போனது போகட்டும் என்று நாரையை அனுப்பி வைத்தேன்...
மீனிற்காக காத்திருந்த
வேளையிலே நாரை
என்னை மறந்தது...
மேக கூட்டதிடம் மெதுவாக
சொல்லியனுப்பினேன்...
களைந்து கூடும் சமயத்தில்
அது கன நேரத்தில்
நினைவற்று போனது...
பொறுத்தது போதும் என
என் நினைவு எனும்
கிளியோடு உயிர் என்ற
சீட்டெழுதி அனுப்பினேன்...
உயிரற்ற என் சடலத்தை
காண வருவாயா...
பிணமாக காத்திருக்கிறேன்
நீ வரும் வரை...