தமிழும் அழகும்

தமிழ் மொழி அறிந்த பின்
தாய் மொழி மறந்து போவார் கவிஞர்கள் பலர்!!!

இலக்கியம் அறிந்த பின்னே
என்னையே மறந்தேன் அடிக்கடி

எழுத எழுத மோகம் கொள்ளுது
பேனாவின் மையும் பேசும் காகிதமும்

உன்னை படிக்க படிக்க பழகிக் கொள்ளுது
எந்தன் பல்லும் நாவும்!!!

அடடா!!!
எத்துணை அழகு
எத்துணை அடக்கம் !!

எத்தனை எழுத்துக்கள் உனக்கு சொந்தமாக இருந்தாலும்
எழுத்தொன்று சிக்கவில்லை என்னிரு இதழுக்குள்!!!

இருந்தாலும் எடுத்து கூறுகின்றேன்
யான் அறிந்த சில வரிகளோடு...

இரண்டு கை இரண்டு கால் என்பதை
உணர்த்த தான் இரண்டடி குறள்!!!

ஐந்தும் ஒன்றே ஆயினும் வேறே என விரலுக்கு ஈடாக
தமிழின் ஐம்பெரும் காப்பியம் பிறந்ததோ!!!

சிறிதாக இருந்தாலும் கவர்ந்திழுக்கும் கண்ணிற்கு
இணை கொண்டு தான் ஹைக்கூ...


அழகிய செவ்வாயின் பல் வரிசையை
அமைப்பை சொல்வது அடியும் தொடையும்!!!

பெண்ணின் கொடி இடையின் வளைசுழிகளை
வர்ணித்து காட்டுகிறது அசையும் சீரும் !!!

கரு நிற கார் குழலை ஒத்து காட்டுவது
பல சீர்கள் கொண்ட பத்து பாட்டு!!!

கன்னியின் மனதிலே காதலை விதைப்பது
கவிஞர்கள் பலர் எழுதிய மரபு கவிகள்!!!

பெண்ணின் நாணத்தை சுட்டுவது நற்றினையும் குறுந்தொகையும்!!!
அவளின் கற்பு நெறியை நிலை நாட்டுவதாய் சிலப்பதிகாரம்!!!

தர்மத்தை செங்கோலாய் உணர்த்துவது மஹாபாரதம்!
தலைவியின் தன்னிகரற்ற நன்னடத்தையை போற்றுவது ராமாயணம் !!!

வாசித்து கொண்டே போனாலும் மனம்
ஒரு போதும் சலிப்பதில்லை உன் வரிகளால் !!!

நன்னெறியை நன்றாய் எடுத்து கூறுவது
இலக்கிய காவியமான ஆசாரக் கோவை !!!

அன்றாடம் இதை செய்தால் நன்றாக வாழ்வாய்
என அழகாய் போதிப்பது பழமொழி நானூறு!!!

இன்னும் உன்னை பற்றி கூறலாம்
பல நூறு வரிகள் !!!

இருந்தாலும் நான் அறிந்த இலக்கியம்
கடலுக்குள் கிடக்கும் சிப்பியாய் சிறிதளவே!!!

எழுதியவர் : அனுஷா தேவி... (14-Oct-16, 5:30 pm)
Tanglish : thamizhum alagum
பார்வை : 414

மேலே