தண்ணீரில்லா உளவு

உழவனின் சமூகம்
உரைப்பதென்ன ??

நீரின்றி அமையாதது
உலகு மட்டுமில்லை
"உளவும் " கூட தான்

யார் அங்கே ...

ஓலைக்குடிசைக்குள்
கரையான் கட்டிய
விட்டதில், கழுத்திற்களவாய்
கயிற்றைக் கட்டி
அழுவது ??...

உயிர் விடும்
முன்னே
உழவனின்
புலம்பலிது..

வான் பொழியும் மாரியை
கண் பார்த்து நாளாச்சு ..,

இரசாயனக் கழிவால்
நொய்யலுக்கு
நோய் வார்த்தாச்சு,,,

மணல் களவால்
காவிரிக்கு
கரை நிண்டாச்சி,,,

பசுமை விளைவால்
நிலத்தடி நீர்
மட்டம் மைல் தூரமாச்சி,,,

ஆள்துளைக் கிணறு தோண்ட
ஆட் கூலிக்கு
அரை ஏக்கர் நிலம் வித்தாச்சு ,,,

ஆர , அமர தோண்டிய
குழியில் - வேர்வைத்
துளிகளும், கண்ணீருமே
நீராச்சு,,,,

இரு மாநிலத்தில்
ஒரு ஆட்சி - அது
காவிரி நீரென்று
ஊருக்குள் பேச்சு,,,

பதினாறு வருடத்தில்
மூன்று ஆட்சி,,,
அதில் காவிரியோ
இன்னும்முடிவுக்கு
வராத தேற்றமாச்சி,,,

இன்று வரும்...
நாளை வரும்..- என
காவிரி நீரை
எதிப்பார்த்த
நாட்களெல்லாம்
கானல் நீராச்சி,,,

பொறுமை இழந்து
வெறுமை சூழ்ந்து
தேம்பி அழுதே
சிறுக்கி மக
போய் சேர்ந்துட்டா...!

நம்பி நொந்து
வீதிக்கு வந்து
ஆட்டுச் சாலையில்
உசுறுறொன்று
இப்போ போகுதடா ...!

இதுவென்ன
வானிலை மாற்றமா ?..
இல்லை
வாழ்வியல் மாற்றமா??..

இரண்டுமில்லை
இதுவொரு
"கூட்டு சதி:
விடாது
பிடித்த சனி ..!

விரட்டும் ...

மிரட்டும் .-

எங்களைப்போல்
உழவனை மட்டும்...!


தண்ணீரில் அரசியல்
செய்பவரே,,
ஒரேயொரு கேள்வி ..!

உழவனின் கண்ணீரை
மட்டும் ஏன்
விட்டுவிட்டிர்கள் ?..

"உப்பென்றா ??..

இல்லை

உபரி நீரென்றா ??..

இந்த
வினோத ஆட்டத்தில் ...
புரியவில்லை
ஒரு புதிர் மட்டும்.. ???

காளை மாடில்லை ..
உழவ நிலமில்லை ..- இனிவரும்
நாட்களில் தண்ணீரையும்
தொலைத்து ,,,
உழவன்
உளவப்போகிறான்..!

உழவன்
உலவுகிறான்,,,
தோளில் ஏர்பூட்டி ...
கையில் விதைக்கெட்டி ...
உலவுகிறான்
விளைநிலம் தேடி - ஆனால்
அன்று அவன்
நிற்குமிடமோ
மொட்டை மாடி.. !!

எழுதியவர் : தாமோதரன் (14-Oct-16, 5:05 pm)
பார்வை : 136

மேலே