உன் நினைவோடு
காலத்தின் புத்தகத்தில்..,
கலைந்துபோன பக்கங்கள் 'நாம்'!
நிகழ்வுகளின் பிடியில்..,
நீங்கிவிட்ட நினைவுகள் 'நாம்'!
காலமும் சேர்க்கவில்லை..,
நம் நினைவுகளுக்கு உயிரோட்டம் தரமறுத்து..!
நிகழ்வுகளும் சேர்க்கவில்லை..,
நினைவுகள் ஏனோ தொலைந்து போனதால்..!
'நான்' உன் நினைவோடு என்றறிந்த வேளை..,
'நீ' தொலைத்து விட்டாய் என் ஞாபகங்களை..!