நானும் நாணமும்
நீல நிற ஆகாயத்தின் மேலே
சந்தனமும் கரிய மையும் கலந்து போனது!!!
சங்கமித்த வண்ணங்களை சண்டையிட்டு
விலகி விடுவது வெள்ளி கம்மியான மின்னல் கீற்றுகள்!!!
சூரியன் விடுமுறை எடுத்து கொண்டது
சந்திரன் சாயங்கால வருகைக்காக காத்திருக்கிறது!!!
அதுவரை தூசி படர்ந்த பச்சை இலைகள்
மழை துளிகள் பட்டு சாயம் தெளிந்து போனது!!!
மஞ்சள் நிற பூக்களெல்லாம் மழைநீரில் நனைந்து
முக்குளித்து நிற்கிறது தங்க முத்துக்கள் போல!!!
நனைந்த காக்கைகள் விறைத்து நின்றாலும்
சிறகை குஞ்சுகளை அரவணைத்து காத்தது!!!
வெக்கையின் தாக்கத்தால் வாழ்ந்த நாய் குட்டிகள்
குப்பை தொட்டில் எச்சி இலையின் கீழே படுத்துறங்கியது!!!
அந்த சாலையின் வலது புறத்தில் தான்
தற்பொழுது என் வருகையும் நிகழந்தது!!!
வேகமாக வீசும் தென்றல் காற்று
மெதுவாக மிதந்து வரும் காகித கப்பல்கள்!!!
தெருவெங்கும் தண்ணீர் பட்டாளம்
நடுவினில் நானோ நனைந்த ரோஜாவாக!!!
வானில் இருந்து தளமிறங்கும் தண்ணீரையும்
மண்ணில் நடந்து வரும் இந்த கன்னியையும் தவிர ஒருவர் கூட இல்லை!!!
அந்த சமயத்தில் தான் நிகழ்ந்தது
ஒரு அழகான தருணம் !!!
விண்ணோக்கி மழையை ரசித்த நான்
மண்ணில் தோண்டிய குழியை காணவில்லை!!!
மெது மெதுவாக நடந்து வந்த பாதங்கள்
பள்ளத்தில் விழும் சமயத்தில் கரம் ஒன்று என்னை இழுத்தது!!!
மிரண்டு போய் விழித்து திரும்பும் முன்பே
சுழற்றி தான் மாரோடு அணைத்தான் ஆணழகன் ஒருவன்!!!
அரை நாழிகை கேட்பாரற்று என் மனது
ஒரு ஆயுள் காலம் வாழ்ந்தது அவனோடு கற்பனையாக!!!
அதுவரை அவன் சொல்லிய அறிவுரையும்
ஆலோசனையும் சிறுதும் எட்டவில்லை என் செவியோடு!!!
என்னை காப்பாற்றிய அவனோ பல மயில்
கடந்து போன பின்னும் நினைவுக்கு வரவில்லை நான்!!!
அடை மழையில் நனையும் உணர்ச்சியற்று
அங்கிருந்து நகர்ந்தேன் நாணம் கொண்ட கன்னியாக!!!
அதுவரை நான் உணராத வெட்கம்
முதன் முறை உணர்ந்தேன் அவன் கண்களால்!!!
யார் அவன்!!!!!!
எங்கிருந்து வந்தான்!!!
எதற்காக என்னை மீட்டான்!!!
மீட்டியவன் என்னை அவனோடு
மூழ்க விட்டு போனது ஏனோ!!!
ஆயிரம் வினாக்களுடன் மெதுவாக நகர்ந்தேன்
எந்தன் வீட்டின் முகவரி மறந்தபடியே!!!