பற்றி எரிக்கும் பயங்கரவாதம்

எவனொருவனின் -

" சிந்தனைப் பிழையிலே
சிந்திடும் ஒரு துளி,
ஊராரின் ஊழி
பறித்திடுமோ??..

ஒருதுளி , சிறு பிழை..,
கால ஓடையிலே
கடலென உருமாறி,
பிறர் வாழ்வுதனை
கெடுத்திடுமோ ??..

மறைத்திடும் பிழை
சேவை வரியாய்
கொலையொன்றை
நிகழ்த்திடுமோ ??..

காமப் பிழையென
நரம்போடு இசைத்திடும்
செல்லிடை விசைகள்,
பெண் பொம்மையைக்கூட
தீண்டிடுமோ ??..


வரம்பு மீறிய பிழை
வன்முறையென
மாறிடுமோ ??..

அனல் கொண்ட
ஆசையில்
"மனம்" கொல்ல
வந்தவனனே..!

மனப்பிழையை
அணைத்திடு - நிதம்
அணையட்டும்
பற்றி எரிக்கும்
பயங்கரவாதமும்..!

வாதத்திற்கு
ப. தாமோதரன்

எழுதியவர் : தாமு (25-Oct-16, 6:34 pm)
பார்வை : 88

மேலே