கண்ணன் பாடுகிறான் காதல் பேசுகிறான்
கண்ணன் பாடுகிறான்
காதல் பேசுகிறான்
தாய் ஆட்டும் தூளியிலே
துயில மறுக்கிறான்
தமிழ் கற்க விழைகிறான்
கண்ணன் பாடுகிறான்
காதல் பேசுகிறான்
நீல சேலைக்குள்ளே
நீச்சல் அடிக்கிறான்
தரையில் தவழ்ந்து செல்ல
தமிழை பிடிக்கிறான்
கண்ணன் பாடுகிறான்
காதல் பேசுகிறான்
மழையில் நனைகிறான்
மண்ணை உண்கிறான்
மங்கை மனதிலே நுழைகிறான்
மயக்கம்தனை தருவித்து மகிழ்கிறான்
கண்ணன் பாடுகிறான்
காதல் பேசுகிறான்
மகிழ்வித்து மகிழ்
என மகிழுகிறான் - தினம்
மலர்களாய் மலரு
என மலருகிறான்
கண்ணன் பாடுகிறான்
காதல் பேசுகிறான் ..........

